இலங்கையில் நிலவிவரும் பெரும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்து தற்போது வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ள கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், “இலங்கையில் தற்போது நடந்து பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் புரட்சி போன்றவற்றை கையாள வசதியாக, இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மை இல்லை”. என்று தெரிவித்துள்ளது.
இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை முதல் பொதுமக்கள் அனைவரும் இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து இன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவியை ராஜிநாமா செய்தார்.
இதன் பின்னர், விரைவில் இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை அமைக்க பிரதான எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.