உக்ரைனுக்கு வந்தடைந்த 8 கப்பல்கள்…உலக நாடுகளுக்கான உணவு தானியங்கள் தயார்!



உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக உக்ரைனிய துறைமுகங்களுக்கு முதல் எட்டு வெளிநாட்டு கப்பல்கள் வந்தடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையினால் உலக அளவில் உணவு தானியங்களின் தட்டுப்பாடு பெருமளவு அதிகரித்து உணவு பொருள்களின் விலையை கடுமையாக அதிகரித்துள்ளது.

இதற்கு உக்ரைனிய துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய உணவு தானியங்களை ரஷ்ய படைகள் தடுத்து வைத்து இருந்ததே காரணம் என பல்வேறு உலகநாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தநிலையில் உக்ரைனின் பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் முழுவதுமாக விரட்டி அடிக்கப்பட்டு, தற்போது தீவு முழுவதுமாக உக்ரைனிய படைகளின் கைகளில் வந்தடைந்துள்ளது.

இந்தநிலையில் உக்ரைனின் விவசாய பொருள்களை உலக நாடுகளுக்கு ஏற்றி செல்வதற்காக அந்த நாட்டின் துறைமுகங்களுக்கு 8 வெளிநாட்டு கப்பல்கள் வந்தடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல்கள் உக்ரைனிய விவசாய பொருள்களை ஏற்றிக் கொண்டு டானூப் ஆற்றின் பைஸ்ட்ரேயா கப்பல் வாயில் வழியாக கருங்கடலுக்கு கொண்டு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பு தீவின் விடுதலையின் காரணமாகவே இந்த கப்பல் போக்குவரத்து சேனல் பயன்பாடு சாத்தியமானது என்றும், இவை உக்ரைனின் தெற்கில் மேற்பரப்பு மற்றும் பகுதியளவு காற்று நிலைமையை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் வெடித்து சிதறிய ரஷ்யாவின் வெடிமருந்து கிடங்கு: பரபரப்பு வீடியோ காட்சிகள்!

மேலும் பெரும்பாலான உக்ரைனிய துறைமுகங்கள் இன்னும் மூடப்பட்டுள்ளன, அவற்றில் சில ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, இதனால் உக்ரைனிய உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் வேகம் முழுமை பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.