மதுரை விமான நிலையத்தில் துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதம் காரணமாக பயணிகள் 12 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
துபாய் செல்லும் அந்த விமானம் காலை 8:45 மணி அளவில் மதுரை வரவேண்டிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக துபாயில் இருந்து வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் துபாய் செல்ல காலையிலேயே வந்திருந்த 176 பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
விமானம் தாமதத்திற்கான காரணத்திற்கும் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் முறையான விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.