ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதா: அமெரிக்கா

Ukraine Invasion and Drones: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், ஈரான் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வழங்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு இரான் வழங்கவிருக்கும் ட்ரோன்களில் சில ஆயுதங்களை தாங்கும் திறன் கொண்டவை.

ஆளில்லா வான்வழி வாகனங்கள் ஜூலை மாத தொடக்கத்தில் ஆயுதங்களைத் தாங்கிச் செலும் திறன் கொண்ட ட்ரோன்களை பயன்படுத்துவதது தொட்ர்வான பயிற்சி அமர்வுகளை வழங்கியிருக்கலாம் என்று நம்புவதாக அமெரிக்கா கூறுகிறது.

வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள்கிழமை, ஜூலை 11) செய்தியாளர்களை சந்தித்த ​​அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இவ்வாறு கூறினார்.

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்று உக்ரைனும் அமெரிக்காவும் கணிக்கும் நிலையில், தற்போது இரானிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்களை பெறுவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக சல்லிவன் கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்; 18 பேர் பலி

“இரானிய அரசாங்கம் ரஷ்யாவிற்கு பல நூறு யுஏவிகள் (unmanned aerial vehicles), வழக்க தயாராகி வருகிறது. அதில் ஆயுதம் தாங்கக்கூடிய யுஏவிகளும் அடங்கும்” என்று சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

“இந்த UAVகளைப் பயன்படுத்த ரஷ்யப் படைகளுக்குப் பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. ஆரம்ப பயிற்சி அமர்வுகள் ஜூலை இறுதியில் தொடங்கும்” என்று நம்புவதாக அவர் கூறினார்.

ஈரான் இதுவரை ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கியதா என்பதை நிரூபிக்கும் எந்த விவரங்களையும் சல்லிவன் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

போரில் ட்ரோன்களின் பயன்பாடு

 ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரில், இரு தரப்பிலும் ட்ரோன்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. துருக்கிய தயாரிப்பான பைரக்டார் ஆயுதமேந்திய போர் UAVகளைப் பயன்படுத்தி, உக்ரைன் படைகள் தங்களை பாதுகாத்து வருகின்றன. 

மேலும் படிக்க | உக்ரைன் மீது KH-22 என்னும் பிரம்மாஸ்திரத்தை ரஷ்யா ஏவக் கூடும்: எச்சரிக்கும் பிரிட்டன்

அதேபோல, அமெரிக்காவும் பிற நட்பு நாடுகளும் பல்வேறு வகையிலான சிறிய ஆளில்லா விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன.

“உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், உக்ரைனை வரைபடத்திலிருந்து துடைக்க முயற்சிக்கும் ரஷ்யாவின் எண்ணம் வெற்றியடையாது என்பதை உணர்த்தும் வகையிலும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று சல்லிவன் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: உக்ரைன்-ரஷ்யா மோதல் தொடர்பாக ஆன்லைன் உட்பட பல்வேறு தளங்களிலும் பல்வேறு செய்திகள் வெளியாகின்றன. அவ்வப்போது மாறிவரும் இந்த செய்திகளை  துல்லியமாகப் வழங்குவதில் ஜீ நியூஸ் கவனம் எடுத்துக் கொண்டாலும், அனைத்து அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மையை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியாது).

மேலும் படிக்க | போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.