ரோகித் சர்மாவை மோசமாக திட்டிய ஹர்திக் பாண்டியா! ஸ்டம்ப் மைக்கில் பதிவான குரல்… கோபத்தில் ரசிகர்கள்



கிரிக்கெட் போட்டி நடக்கும் களத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை சக வீரர் ஹர்திக் பாண்டியா மோசமான தகாத வார்த்தைகளில் திட்டியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் பாண்டியாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியின் போது தான் இந்த விடயம் அரங்கேறியுள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங்கை மாற்றியமைக்கும்போது ஹர்திக் பாண்டியாவின் இடத்தை மாற்றியதால் அதிருப்தியடைந்த அவர் தகாத வார்த்தைகளால் ரோகித்தை திட்டியுள்ளார்.


இது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக கேட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் டுவிட்டரில் வறுத்தெடுத்தனர்.

#HardikabusedRohit என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு வைரலாக்கப்பட்டது.
இந்த மனப்பான்மை ஹர்திக் பாண்டியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.