ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. illusion என்ற சொல் லத்தீன் வார்த்தையான illudere என்பதிலிருந்து வந்தது, அதாவது “கேலி செய்வது”.
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன,
அதிலும் விலங்குகளைப் பற்றிய ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இந்த படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை.
அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.
கீழே உள்ள படத்தை பாருங்கள்!
என்ன தெரிகிறது? மரங்களுக்கு இடையே மனிதன் ஓடுவது போல தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் நன்றாக ஏமாந்துவிட்டீர்கள். இப்போது மீண்டும் ஒருமுறை இந்த படத்தை உற்று பாருங்கள்..
இப்போது என்ன தெரிகிறது? கண்டிப்பாக இம்முறை நீங்கள் ஒரு குட்டி நாய், பனிப்புதருக்குள் இருந்து ஓடிவருவதை பார்த்திருப்பீர்கள்!
கிளார்க் ஏ டேவிட்சன் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த இல்யூஷன் படத்தை பகிர்ந்து, ஒரு மனிதன் காட்டுக்குள் ஓடுவதை தான் நான் பார்த்தேன். நான் மீண்டும் பார்க்கும் வரை. நீங்கள் அதை பார்க்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
இந்த படத்தை இப்போதே உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி, அவர்கள் என்ன பார்த்தார்கள் என்று கேளுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“