இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்: இங்கிலாந்தின் புதிய பிரதமர் செப்டம்பர் 5ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்றும், தற்போது போரிஸ் ஜான்சனுக்குப் பின் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்க 11 பேர் போட்டியிடுகின்றனர்.
போட்டியின் ரிஷி சுனக் முன்னணியில் இருக்கிறார், ஆனால் உடனடி வரிக் குறைப்புகளின் வாய்ப்புகள் தொடர்பான அவரது கருத்து அவருக்கு எதிராக மாறலாம். “ஆறுதல் தரும்” உடனடி வரிக் குறைப்பு என்பது, எதிர்கால சந்ததியினரை மோசமாக்கும் என்று ரிஷி சுனக் கூறினார்.
பிரிட்டனின் புதிய பிரதமர் செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படுவார்
போரிஷ் ஜான்சனுக்குப் பின் இதுவரை 11 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தனது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களின் கிளர்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஜான்சன் விலகினார்
மேலும் படிக்க | இங்கிலாந்தின் பிரதமராவாரா இந்திய வம்சாவளி ரிஷி சுனக்
தலைமைக்கான தேர்வுக்கு ஏற்பாடு செய்யும் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 1922 குழு (1922 committee of Conservative members of parliament), புதன்கிழமை முதல் சுற்று வாக்கெடுப்புக்குச் செல்ல நம்பிக்கையாளர்களுக்கு கட்சியின் 358 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து குறைந்தபட்சம் 20 பரிந்துரைகள் தேவைப்படும் என்று கூறியது.
30 வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்றவர்கள் அடுத்தச்சுற்று வாக்கெடுப்புக்கு முன்னதாக நீக்கப்படுவார்கள். ஏறக்குறைய அனைத்து போட்டியாளர்களும், பிரதமராவதற்கு ஆதரவைப் பெற விரிவான வரிக் குறைப்புகளுக்கு உறுதியளித்துள்ளனர்.
“இதை முடிந்தவரை சுமூகமாகவும், சுத்தமாகவும், விரைவாகவும் முடிக்க நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என்று குழுவின் தலைவர் கிரஹாம் பிராடி கூறினார். சுமார் 200,000 கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் தபால் வாக்குப் பதிவு நடைபெறும்போது, பிரதமர் வேட்பாளர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள்.
மேலும் படிக்க | ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதா: அமெரிக்கா
போரிஸ் ஜான்சன் பதவி விலகியதற்கு பிறக்கு, கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதமர் யார் என்பது குறித்து எதிர்பார்ப்புகளும் ஊகங்களும் அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் பிரிட்டனின் அடுத்த பிரதமராவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பட்டதாரியான ரிஷி சுனக் 2015ம் ஆண்டு, பிரிட்டனின் எம்.பி. ஆனார். பிரபல நிறுவனமான இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் தமிழர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவை மணந்துள்ளார். ரிஷி – அக்ஷதா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேலும் படிக்க: England PM: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் இந்தியரா? பரபரப்பு ஊகங்கள் உண்மையாகுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR