அமெரிக்காவில் வாழ எவ்வளவு பணம் வேண்டும்..?!

இந்தியாவில் பலருக்கும் அமெரிக்கா என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கும். படித்து முடித்து அமெரிக்கா சென்று விட வேண்டும் என நினைப்பதுண்டு.

பொதுவாக அமெரிக்கா உலகின் காஸ்ட்லியான நாடுகளில் ஒன்றாக உள்ளது. எனினும் மக்கள் அதிகம் விரும்பும் நாடாகவும் உள்ளது.

என்றேனும் யோசித்தது உண்டா? அமெரிக்காவில் வாழ எவ்வளவு பணம் வேண்டும் என்று?

விளாடிமிர் புதினின் புதிய ஆயுதம்.. நடுங்கும் ஐரோப்பா.. அமெரிக்கா வருமா..?!

யார் வசதியானவர்கள்

யார் வசதியானவர்கள்

சிஎன்பிசி அறிக்கையின் படி, அமெரிக்கர்கள் 7,74,000 டாலர்கள் வைத்திருந்தால், நிதி ரீதியாக வசதியாக உள்ளவர்களாக கருதப்படுவார்கள் என சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் அமெரிக்காவில் நீங்கள் வசிக்கும் நகரினை பொறுத்து மேற்கண்ட தொகையானது மாறும்.

 

 நியூயார்க் & சான்பிரான்சிஸ்கோ

நியூயார்க் & சான்பிரான்சிஸ்கோ

நிதித் சேவை நிறுவனமான சார்லஸ் ஸ்ஷாப்பின் வருடாந்திட மாடர்ன் வெல்த்தின் ஆய்வறிக்கையின் படி, சான்ஃபிரான்சிஸ்கோ அல்லது நியூயார்க் போன்ற அதிக செலவினங்கள் உள்ள நகரங்களில், நீங்கள் வசதியாக வாழ 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்பு தேவைப்படும் என கூறுகின்றது.

சான்பிரான்சிஸ்கோ
 

சான்பிரான்சிஸ்கோ

சான்பிரான்சிஸ்கோவில், ஆய்வில் பதிலளித்தவர்களில் நிதி ரீதியாக வசதியாக இருக்க 1.7 மில்லியன் டாலர் நிகர மதிப்பு கொண்டிருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய 12 மெட்ரோ நகரங்களில் நடத்திய ஆய்வில் சான்பிரான்சிஸ்கோ மிக காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றாக உள்ளது.

 

மற்ற முன்னணி நகரங்கள்

மற்ற முன்னணி நகரங்கள்

அமெரிக்காவின் நிதி ரீதியாக வசதியாக இருக்க 2022ம் ஆண்டில் எவ்வளவு பணம் தேவை என்பதை பார்க்கலாம்.

  • சான்பிரான்சிஸ்கோ – 1.7 மில்லியன் டாலர்
  • நியூயார்க் நகரம் – 1.4 மில்லியன் டாலர்
  • தெற்கு கலிபோர்னியா (லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் டியாகோ) – 1.3 மில்லியன் டாலர்
  • சியாட்டில் – 1.2 மில்லியன் டாலர்
  • வாஷிங்டன் – 1.1 மில்லியன் டாலர்

 

மில்லியன் டாலருக்கும் கீழ் இருந்தால் போதும்?

மில்லியன் டாலருக்கும் கீழ் இருந்தால் போதும்?

  • சிகாகோ- 9,56,000 டாலர்கள்
  • ஹூஸ்டன் – 9,19,000 டாலர்கள்
  • போஸ்டன் – 8,92,000 டாலர்கள்
  • டல்லாஸ் – 8,40,000 டாலர்கள்
  • அட்லாண்டா – 7,71,000 டாலர்கள்
  • போனிக்ஸ் – 7,47,000 டாலர்கள்
  • டென்வர் – 6,71,000 டாலர்கள்

யாரிடம் ஆய்வு

யாரிடம் ஆய்வு

இந்த ஆய்வானது கடந்த பிப்ரவரி 2022ல் நடத்தப்பட்டது. இது 500 – 750 உள்ளூர் மக்களிடம் நடத்தப்பட்டது. இது அமெரிக்காவின் ஒவ்வொரு மெட்ரோ நகரங்களில் நடத்தப்பட்டது. இது 21 வயது முதல் 75 வயதானவர்கள் வரையில் நடத்தப்பட்டது.

மாறுபடக் கூடிய விஷயம்

மாறுபடக் கூடிய விஷயம்

ஒருவர் நிதி ரிதீயாக வசதியானவராக உள்ளார் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடிய விஷயம். இது சொந்த வீடு, சேமிப்பு, செலவினங்கள் என்பதை பொறுத்து மாறுபடும். எனினும் மேற்கண்ட விகிதங்கள் சுமாரான ஒரு கணக்கீடாகத் தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: us அமெரிக்கா

English summary

How much money do you need to live in the US?

How much money do you need to live in the US?/அமெரிக்காவில் வாழ எவ்வளவு பணம் வேண்டும்..?!

Story first published: Tuesday, July 12, 2022, 12:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.