தமிழில் அவன் இவன் படத்தில் நடித்த ராமராஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ராமராஜ். 72 வயதான இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக ராமராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது திடீர் மரணம் திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராமராஜ் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.