இந்தியாவின் ஐ.டி. மையம் என்றாலே அது பெங்களுரூதான். அந்த பெங்களூரு நகரத்தின் மேம்பாலம் ஒன்றின் நடுவே பைக்கில் இருந்தபடி, நபர் ஒருவர் லேப்டாப் வைத்து வேலை செய்யும் படம் ஒன்று linkedin தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஹர்ஷ்மீத் சிங் என்பவர் பதிவிட்டுள்ள பதிவு நெட்டிசன்களிடையே கலவையான கருத்துகளை பெற்றிருக்கிறது.
ஹர்ஷ்மித்தின் பதிவில், “பெங்களூரு சிறந்ததாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா? இரவு 11 மணிக்கு, பெங்களூரின் முக்கியமான பிசியான மேம்பாலம் ஒன்றில் பைக்கில் இருந்தபடியே ஒருவர் லேப்டாப் வைத்து வேலை செய்கிறார்.
ஒரு பாஸாக நீங்கள் இருந்து, உங்கள் சக ஊழியர்களின் பாதுகாப்பை விலையாக கொடுத்துதான் அவர்களுக்கான வேலையை முடிக்கும்படி பயமுறுத்தினால், இது நீங்கள் சிந்திப்பதற்கான நேரமும் கூட.
முக்கியமாக நீங்கள் ஒரு பெரிய பொறுப்பில் பதவியில் இருக்கும்போது, Its Urgent மற்றும் Do it ASAP என்ற வார்த்தைகளை உபயோகிக்கும்போது கவனமாக இருங்கள்.
ஏனெனில், இந்த வார்த்தைகள் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியாது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனைக் கண்ட பலரும், அந்த நபர் ஒருவேளை டிக்கெட் புக்கிங் செய்வது, புக் செய்த டிக்கெட் தொடர்பான உறுதி செய்தல் என தனது சொந்த வேலையில் கூட ஈடுபட்டிருக்கலாம் என ஹர்ஷ்மீத் சிங்கின் பதிவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பதிவு வைரலானதை அடுத்து linkedin தளத்தில் பலரிடையே வார்த்தை போரையே ஏற்படுத்தியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM