12 வருடங்களுக்கு பிறகு மம்முட்டியுடன் இணையும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்
மலையாள திரையுலகில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து மோகன்லாலை வைத்து படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய ஆராட்டு திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. இருந்தாலும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன், அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
கடந்த 12 வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடித்த பிரமாணி என்கிற படத்தை இயக்கிய உன்னிகிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மம்முட்டியுடன் இணைந்து இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல புலிமுருகன் மற்றும் கடைசியாக மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய ஆராட்டு ஆகிய படங்களுக்கு கதை எழுதிய உதயகிருஷ்ணா தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார் என்பது இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.