ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டது! முதலிடத்தில் எந்த நிறுவனம்?


ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆப்பிளை சாம்சங் நிறுவனம் முந்தியுள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சாம்சங் நிறுவனம் முன்னிலை வகிப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையானது என்பது குறித்த ஆய்வறிக்கையை இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டது! முதலிடத்தில் எந்த நிறுவனம்? | Samsung High Domination Smartphone Tamil

Crystal Cox/Business Insider

அதன்படி 23.4 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 73.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்துள்ளது. 

இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 18 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சியோமி, ஓப்போ மற்றும் விவோ ஆகிய நிறுவனங்கள் முறையே 3, 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளன. இந்த மூன்று நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியில் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டது! முதலிடத்தில் எந்த நிறுவனம்? | Samsung High Domination Smartphone Tamil



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.