இலங்கையில் அடுத்த அதிபர் ரெடி… விமான நிலையத்தில் சிக்கிய பசில்!

Sri Lanka crisis Updates in tamil: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தள்ளது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்த நிலையில், பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார். கோத்தபய ராஜபக்சே கடற்படை முகாம் தளத்தில் தங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி நிலையில், இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் அவர் இலங்கையில்தான் இன்னும் இருக்கிறார் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.

ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட கோட்டாபய ராஜபக்சே

இலங்கையைச் சேர்ந்த தினசரி செய்தி இதழான டெய்லி மிரர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், நாளை ஜூலை 13-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே கடிதத்தில் எழுதியுள்ளார் என்றும் செய்தி வெளியிட்டது.

“அதிபரின் இராஜினாமா கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்க மூத்த அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது. அவர் அதனை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளிப்பார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த நாளை அறிவிப்பை வெளியிடுவார். “என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பசில் ராஜபக்சே அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி…

இலங்கை முன்னாள் மந்திரி பசில் ராஜபக்சே அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். இதற்காக கட்டுநாயக்கா விமானநிலைய சென்ற பசில் ராஜபக்சேவின் ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பசில் ராஜபக்சே மீண்டும் இல​ங்கை திரும்பியுள்ளார். மேலும் விமானநிலையத்தில் இருந்த பயணிகள் பசில் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த அதிபராக சஜித் பிரேமதாச…

கோத்தபய ராஜபக்சே தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜூலை 20 ஆம் தேதி, இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறும் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி சஜித் பிரேமதாசவை நாட்டின் அடுத்த அதிபராக தேர்வு செய்ய கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.