உலகிலேயே மிகவும் வயதான புலி திங்கள்கிழமை இறந்ததையடுத்து, புலிக்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றன.
இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் உள்ள தெற்கு கைர்பரி மீட்பு மையத்தில் உயிரிழந்த ராஜா எனும் அந்த புலிக்கு வயது 25 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகின்றது.
ராயல் பெங்கால் புலி என அழைக்கப்படும் ராஜாவின் மறைவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், எம்பி பி.சி.மோகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ஜல்தபாரா வனப்பகுதியில் உள்ள மையத்தில் அதிகாலை 3 மணியளவில் புலி மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் ராஜாவிற்கு இணையத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு சென்ட்ரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக எம்பி மோகன், ராஜாவின் நீண்ட ஆயுள் அரிது என்று குறிப்பிட்டார். புலிகளின் சாதாரண ஆயுட்காலம் 18 ஆண்டுகளாகும், ஆனால் ராஜா 25 ஆண்டுகள் வாழந்துள்ளது. மேலும், ராஜா இந்தியாவின் பெருமை என்று மோகன் ட்வீட் செய்துள்ளார்.
“RAJA” the tiger ( 25yrs 10 months) at SKB rescue center, died on 11th July, 2022, arround 3 AM , it was one of the the oldest surviving tiger in the country, leaving everyone in state of mourning.
RIP pic.twitter.com/G54mnFcbCN— Surendra Kumar Meena IAS (@iSurendraMeena) July 11, 2022
ஜல்தபராவில் உள்ள வன இயக்குநரகத்தின் சுரேந்திர குமார் மீனா, ராஜாவுக்கு அஞ்சலி செலுத்திய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்திய வன சேவை அதிகாரி பர்வீன் கஸ்வான், முதலை தாக்குதலில் இருந்து ராஜா காப்பாற்றப்பட்டு மீட்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.