நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புறக்கோட்டையில் நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை சந்திப்பதற்காக வருகைத் தந்த போதே அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
மீண்டும் தந்திரோபாயங்களை பயன்படுத்தும் ராஜபக்சர்கள்
மேலும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத தலைவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட உலப்பனே சுமங்கல தேரர், மக்களை நிராகரித்த தலைவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இப்போது நிலைமை மாறி வருகிறது.
மீண்டும், ராஜபக்சக்கள் கீழ்த்தரமான தந்திரோபாயங்களைப் பிரயோகித்து, பசில் ராஜபக்சவின் கீழ்த்தரமான அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
எனவே, பசில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஏனைய மோசடியாளர்களுக்கு நாம் கூறுகின்றோம். வலுக்கட்டாயமாகப் பிரதமர் பதவியைக் கைப்பற்றிய ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் சொல்கிறோம்.
9ஆம் திகதி புயல் வந்தது 13ஆம் திகதி சுனாமி வரப் போகிறது என்பதை தெளிவாக நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.