Ula Rail : உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்த இந்திய ரயில்வேயின் ஆச்சரிய முன்னெடுப்பு!

இது வெறுமனே பயணிகளை ஏற்றிச் செல்லும் இரயில் மட்டுமல்ல… இதன்மூலம் ஆலயங்களை தரிசிப்பது மட்டுமல்ல.. கட்டிடங்களைக் காண்பது மட்டுமல்ல… இந்தியாலையே காண்பது என்பது ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாகும்…

உலகளாவிய பார்வையில் இந்தியா என்பது உணர்வுபூர்வமாக தொடர்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு உன்னத நாடாகும். பன்முகத்தன்மை கொண்ட நம் பாரத நாட்டுடன் மற்ற எந்த நாட்டையும் ஒப்பிட முடியாது.

இந்த ரயில் பெட்டிகளின் சாளரங்கள் வெறும் கம்பிகளல்ல. அவை நம்நாட்டில் உள்ள பல மாநிலங்களின் கலாச்சாரங்களையும் பாரம்பரியத்தையும் காட்டும் காலக் கண்ணாடிகள் ஆகும். செறிவான கலாச்சாரங்கள், மாறுபடும் நிலப்பகுதிகள், கட்டிடக்கலையின் உன்னதங்கள், காலத்தால் கணிக்க இயலாத கண்கவர் கோட்டைகள் ஆன்மீகத்தின் பிறப்பிடங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமே சுற்றுலாப் பயணம் ஆகும்…

இந்தியன் ரயில்வேயானது உள்ளூர் சுற்றுலாக்களை மேம்படுத்த கொண்டு வந்த திட்டமே “பாரத் கவுரவ் திட்டம்” ஆகும்… இந்தியன் ரயில்வேயுடன் டிராவல் டைம்ஸ் நிறுவனமும் சேவை பங்குதாரராக இணைந்து பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் “உலா ரயில்” என்ற சிறப்பு யாத்திரை ரயிலை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறது. இந்த உலா ரயில் இந்தியத் துணைக் கண்டத்தின் பல புண்ணிய ஸ்தலங்களையும் ஈற்றிப் பார்க்கும் இடங்களையும் இணைக்க உள்ளது.

டிராவல் டைம்ஸ் இந்தியா நிறுவனம் திரு கே. சிவப்பிரசாத் மற்றும் திரு.கணேஷ் என்ற இரு சகோதரர்களால் 1981ம் ஆண்டு சென்னை தி.நகரில் தொடங்கப்பட்டது… சுற்றுலாத் துறையில் 43 வருட ஆழ்ந்த அனுபவம், இந்தியா முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் அருமையான தகவல் நொடர்புகள் மூலம் அந்தந்த ஊர்களில் போக்குவரத்து, தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்வது, 600க்கும் மேற்பட்ட முழுநீள தனி சுற்றுலா ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான உணவு, பேருந்து, அறை, மேலாளர், பாதுகாவலர் சேவைகளை வழங்கி 5,00,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை வழங்கியதன் மூலம் டிராவல் டைமஸ் “உலா ரயிலை” இயக்கும் வாய்ப்பை இந்தியன் ரயில்வேயிடம் இருந்து பெற்றுள்ளது…

இந்தியன் ரயில்வே உலா ரயிலின் முதல் புறப்பாடு வரும் 23.07.22 அன்று மதுரையில் இருந்து “திவ்ய காசி -ஆடி அமாவாசை காசி யாத்திரை” என்ற பெயரில் 12 நாட்கள் கொண்ட யாத்திரையாக புறப்பட உள்ளது. செல்லும் வழியில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் மற்றும் விஜயவாடாவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கீழ்க்கண்ட இடங்களுக்குச் செல்கிறது. இந்த யாத்திரையின் சிறப்பு ஏழு சக்தி பீடங்களையும், மூன்று கயாவையும் தரிசித்தல் ஆகும். ஏழு சக்தி பீடங்களாவன: ஆந்திராவின் பீதாம்புரத்தில் புருகுதிகா தேவி, பூரி பிமலா தேவி, ஜஜ்பூரில் பிரஜா தேவி, கொல்கத்தா காளி, கயாவில் மங்கள கௌரி, காசி விசாலாட்சி மற்றும் பிரயாக்ராஜ் அலோப்தேவி தரிசிக்கலாம்…

பிறகு பாத கயா, நாபி கயாவில் சிரார்த்தம், சிரோ சுயாவில் ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு பிண்ட பிரதானம் தந்து பூஜைகள் செய்தல், ஓடிசாவில் பூரி ஜெகந்நாதர், கொனார்க் சூரியக்கோவில், கொல்கத்தா பேலூர் மடம், விக்டோரியா மெமோரியல், விஷ்ணு பாத தரிசனம், காசி கங்கையில் புனித நீராடல், காசி விசுவநாதர் ஆலய காரிடார், அன்னபூரணி தரிசித்தல், விஜயவாடா கிருஷ்ணா ததியில் புனித நீராடி நாகபஞ்சமி தினத்தன்று கனக துர்கா தரிசிக்கலாம்…

உலா ரயிலில் அடுத்து வர உள்ள யாத்திரைகள்:

ஷீரடி ஸ்பெஷல்

ஹைதராபாத் சமத்துவ சிலை (ராமானுஜா) ஷீரடி – ஷானி ஷிங்னாபூர் – த்ரயம்பகேஷ்வர் – பஞ்சவடி – பண்டரிபூர் – மந்திராலயம்.

பொற்கோயில் & அஜமீருடன் விடுமுறை சிறப்பு

கோவா – மும்பை – அமிர்தசரஸ்-ஜெய்ப்பூர்- அஜ்மீர் – ஒற்றுமை சிலை

வடகிழக்கின் அற்புதங்கள்

பூரி, கொனார்க், கொல்கத்தா, டார்ஜிலிங் & கேங்டாக்,

உலா ரயில்

குஜராத் & பஞ்ச துவாரகா

நாத் துவாரகா, பெட் துவாரகா, டகோர் துவாரகா, துவாரகா, சோம்நாத் நிஷ்கலங்க் மகாதேவ்

காஷ்மீர் & வைஷ்னோவ் தேவியின் சிறப்புகள்

வைஷ்ணவ் தேவி, ஸ்ரீநகர், குல்கமார்க், சோன்மார்க், பஹல்காம்

ராயஸ் ராஜஸ்தான்

டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், புஷ்கர், அஜ்மீர், ஜோத்பூர், மவுண்ட் அபு, உதய்பூர், ஜெய்சால்மர் & பிகானேர்.

இந்த உலாரயிலில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன தெரியுமா…?

உலா ரயிலானது சுற்றுலாப் பயணிகளுக்காக உலகத் தரத்திலான அனைத்து சேவைகளையும் ஒருங்கே கொண்டுள்ளது… ஆச்சரியமூட்டும் பயணத் திட்டங்களும், கட்டணத்திற்கேற்ற வசதிகளும் பயணிகளுக்கு மறக்க முடியாத இனிய நிளைவுகளைத் தர உள்ளன…

பயணம்:

நான்கு 3AC கோச்கள், ஆறு 2SL கோச்கள் இரண்டு பேன்ட்ரி கார் மற்றும் இரண்டு SLR. கோச்சுகளைக் கொண்டதாக இந்த உலா ரயில் அமைந்துள்ளது… டீலக்ஸ் AC/NAC வாகனங்கள் இரயில் நிலையத்தில் இருந்து தங்குமிடங்களுக்கும் உள்ளூர் சுற்றிப் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

உணவு:

முற்றிலும் சுகாதாரமான முறையிலும் பாதுகாப்பாகவும் தயாரிக்கப்படுகின்ற தென்னிந்திய சைவ உணவு வகைகள் யாத்திரை முழுவதும் அளவற்ற முறையில் வழங்கப்படுகிறது. காலை காபி முதல் இரவு உணவு வரையிலும் பயணிகளின் உணவுத் தேவைகள் அனைத்தையும் இந்த உலா ரயில் பூர்த்தி செய்கிறது. மேலும் சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது சில உள்ளூர் உணவு வகைகளும் தயாரித்து வழங்கப்படுகின்றன. வீட்டை விட்டுப் புறப்படும் பயனர்கள் யாத்திரை முடியும் வரை எங்குமே தங்களது வீட்டு உணவுத் தரத்தை மறக்க இயலாத அளவிற்கு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

தங்குமிட வசதி:

இந்த உலா ரயில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு விதமான தங்குமிடங்களை வழங்குகிறது… அதாவது பட்ஜெட் வகுப்பு பயணிகளுக்கு சுகாதாரமான காற்றோட்டம் நிறைந்த ஹால்கள் தரப்படுகின்றன. ஏனென்றால் உலா ரயிலின் உயிர் நாதமே மலிவு விலை சுற்றுலாவாகும். ஸ்டேண்டெர்டு வகுப்பு பயணிகளுக்கு NAC அறைகள், கம்பர்ட் வகுப்பு பயணிகளுக்கு AC அறைகள் கூடுதல் சுட்டணத்தில் வழங்கப்படுகின்றன…

சுற்றுலா மேலாளர்கள்:

“அதிநி தேவோ பவ” – அதாவது “வாடிக்கையாளர்களே நமது கடவுள்” என்ற பொன் வரிகளுக்கு ஏற்ப பயணிகளுக்கு உதவுவதற்காக சுற்றுலாத்துறை சார்ந்த பல வருட அனுபவம் பெற்ற தகுதியான சுற்றுலா மேலாளர்கள் ஒவ்வொரு கோச்சுக்கும் தனித்தனியே நியமிக்கப்படுகின்றனர்.

கோச் பாதுகாவலர்கள்:

வெளிநபர்கள் கோச்சுக்குள் வருவதைத் தடுப்பதற்கும், இரயிலுக்குள் இருக்கும். உடைமைகள் வெளிநபர்களால் திருடு போவதைத் தடுப்பதற்கும் ஒவ்வொரு கோச்சுக்கும் அனுபவம் வாய்ந்த மிடுக்கான பாதுகாவலர்கள் நியமிபடுகின்றனர்.

உடைமைகளைத் தூக்கும் பிரச்சினை:

சுற்றுலா செல்லும் பலரையும் குறிப்பாக வயதானவர்களை மலைக்க வைக்கும் ஒரே விஷயம் உடைமைகளைச் சுமப்பது தான். உயா ரயில் உடைமைகளைச் சுமப்பதில் இருந்து விடுதலை அளிக்கிறது.. ஆம், அனைத்து உடைமைகளையும் இரயிலிலேயே வைத்துக்கொண்டு தங்குமிடங்களுக்குச் செல்லும்போது மட்டும் ஒரு செட் உடைகளைக் கையில் எடுத்துக் கொண்டு சென்று வரலாம்…

நெகிழ்வான கட்டண விகிதங்கள்:

உலா ரயில் தனது கட்டனா விகிதங்களில் அதனுள் தரப்படும் சேவைகளைப் பொறுத்து ஒரு சமநிலையைப் பராமரிக்கிறது… ஆனால் சேவை புரிவதிலும், உணவின் தரத்திலும் கட்டணத்தைப் பொறுத்து எவ்விதமான வேறுபாடும் காட்டப்படுவது இல்லை. அதாவது:

Budget: 2SL-coach in train, Bus, Hall, Unlimited Veg food

Standard: 2SL coach in train, Bus, NAC rooms, Unlimited Veg food

Comort: 3AC coach in train, Bus, NAC rooms, Unlimited Veg food

இவ்வாறு ஒவ்வொரு வகுப்பிற்கும் அதற்கான சேவைகள் நிறைவாக வழங்கப்படுகின்றன.

முன்பதிவு:

இந்த உலா ரயிலில் முன்பதிவு செய்வது மிகவும் எளிது. www.ularail.com என்ற இணையதளம் மூலம் உள் சென்று தேவைப்படும் விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் எளிதாக முன்பதிவு செய்துவிட முடியும். உடனடியாக உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு முன்பதிவு உறுதிச் செய்தி வந்துவிடும். பிறகு வாடிக்கையாளர் சேலை மைய அதிகாரி உங்களைத் தொடர்பு கொண்டு உங்களது முன்பதிவை மீண்டும் உறுதி செய்வார். Facebook, Instagram மற்றும் Whatsapp மூலமும் பயணிகள் முன்பதிவு மேற்கொள்ளலாம்.

மேலும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கும்பகோணம் புதுச்சேரி, விழுப்புரம், சேலம், ஈரோடு, திருநெல்வேலி மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சின், கோழிக்கோடு ஆகிய ஊர்களிலும் தற்போது உலா ரயிலுக்கான முன்பதிவு நடந்து வருகிறது.

வாருங்கள்..

ஆச்சர்யமூட்டும் பல சொகுசான வசதிகள் நிறைந்த இந்த சிறப்பு உலா ரயிலின் உன்னதமான பயணத் திட்டங்கள் மூலம் எண்ணாற்ற சுற்றிப் பார்க்கும் இடங்களையும், ஆனமீகம் செறிந்த புண்ணிய ஸ்தலங்களையும் சுற்றிப் பார்ப்போம்.. இந்தியாவைக் காண்போம்… நீங்கள் உலா ரயிலில் பயணம் செய்ய உள்ள அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கிறோம்..

TRAVEL TIMES (INDIA) PVT LTD

7305 85 85 85 WWW.LILARAILCOM/

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.