பழைய டிவிக்கு விடிவுகாலம் – Chromecast with Google TV அதை ஸ்மார்ட் டிவியாக மாற்றும்!

New Chromecast with
Google
TV India Launch:
கூகுள்
தனது புதிய Chromecast உடன் Google TV கேட்ஜெட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த கேட்ஜெட்டானது முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களை அணுக பயனர்களை அனுமதிக்கிறது. புதிய கூகுள் குரோம்காஸ்ட் 4K HDR வீடியோ பிளேபேக் ஆதரவுடன் வருகிறது.

அதுமட்டுமில்லாமல், இது டால்பி விஷன் ஆதரவையும் பெறுகிறது. கூகுள் டிவியுடன் கூடிய Chromecast குரல் தேடலுக்கான வாய்ஸ் அசிஸ்டெண்ட் ரிமோட்டுடன் வருகிறது. இது பிரத்யேக Google Assistant பட்டன்களை ஆதரிக்கிறது.

Nothing Phone (1) கேமரா மாதிரி படங்கள் – போட்டானா இப்டி இருக்கணும்!

இது முதன்முதலாக 2020ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த ஸ்மார்ட் கேட்ஜெட் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சாதனம் இந்தியாவில் Realme 4K Smart Google TV Stick, Amazon Fire TV Stick 4K Max, MI TV Stick ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

Telecom: ஏர்டெல் ரூ.265 திட்டத்தில் அதிரடி மாற்றம் – பயனர்களுக்கு கூடுதல் நன்மைகள்!

கூகுள் டிவியுடன் வரும் குரோம்காஸ்ட் விலை – Chromecast with Google TV Price in India

இந்தியாவில் கூகுள் டிவியுடன் கூடிய Chromecast விலை ரூ.6,399 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் மூலம் இதை பயனர்கள் வாங்கலாம். இது ஒரே ஒரு வண்ண வகையில் மட்டுமே கிடைக்கிறது. ஆன்லைன் ஸ்டோர்கள் உடன், அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் இந்த கேட்ஜெட் கிடைக்கும் என கூகுள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கூகுள் டிவியுடன் வரும் குரோம்காஸ்ட் சிறப்பம்சங்கள் – Chromecast with Google TV Features

கூகுள் டிவியுடன் வரும் குரோம்காஸ்ட் சிறிய வடிவமைப்புடன் வருகிறது. இதை HDMI போர்ட் வழியாக டிவியில் இணைக்க முடியும். இது பயனர்களுக்கு டிவியில் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், ஆப்ஸ், OTT சந்தாக்களுக்கான அணுகலை வழங்கும்.

இந்த சமீபத்திய Chromecast மாடல் 4K HDR ஸ்ட்ரீமிங், டால்பி விஷன் போன்ற மேம்பட்ட காட்சி தொழில்நுட்பத்தை உள்ளடக்கி வருகிறது. இது HDMI டால்பி ஆடியோவையும் ஆதரிக்கிறது. நிறுவனம் Google TV உடன் Chromecast உடன் வாய்ஸ் அசிஸ்டெண்ட் ரிமோட்டையும் வழங்குகிறது.

Apple iPhone: 10 மாதங்களாக ஆற்றில் கிடந்த ஐபோன் – எடுத்து பாத்தப்போ..?

பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டனும் இதில் இடம்பெற்றுள்ளது. இதில், பயனர்கள் ஸ்மார்ட் வீட்டை உருவாக்கி அதை கட்டுப்படுத்த முடியும். யூடியூப், நெட்பிளிக்ஸ் போன்ற பொழுதுபோக்கு தளங்களுக்காக பிரத்யேக பொத்தானும் இந்த ரிமோட்டில் உள்ளன.

Google TV உடன் வரும் Chromecast ஆனது Amazon Prime Video, Spotify, Disney+ Hotstar, Zee5, MX Player, Voot போன்ற பல பயன்பாடுகளை வழங்குகிறது. கூகுள் கேமிங் மூலம் உங்கள் பழைய டிவியில் விளையாடவும் முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.