நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜி அதன் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுத்துள்ளது.
இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், முதலீட்டாளர்களுக்கு கிடைத்த கூடுதல் வருவாயாக பார்க்கப்படுகின்றது.
இது கடந்த ஜூன் காலாண்டு முடிவினை இன்று வெளியிட்டுள்ள நிலையில், 2023ம் நிதியாண்டிற்கான இடைக்கால டிவிடெண்டினையும் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் வாழ ஒரு மாசத்துக்கு எவ்வளவு பணம் வேணும் தெரியுமா..?!
எவ்வளவு டிவிடெண்ட்?
ஹெச்சிஎல் டெக்னாலஜி பங்கின் முகமதிப்பு ஒரு பங்குக்கு 2 ரூபாயாகும். இதற்கிடையில் இடைகால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 10 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் லாபம் 8.6% சரிவினைக் கண்டு, 3283 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
வரிக்கு பிந்தைய லாபம்?
எனினும் வரிக்கு பிந்தைய லாபம் (PAT) கடந்த ஆண்டினை காட்டிலும் 2.4% வளர்ச்சி கண்டுள்ளது.
மறுபக்கம் ஒருங்கிணைந்த வருவாய் விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 16.9% அதிகரித்து, 23,464 கோடி ரூபாயாக அதியக்ரித்துள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 3.8% அதிகரித்துள்ளது.
இடைக்கால டிவிடெண்ட்
ஹெச்சிஎல் அறிவித்துள்ள இடைக்கால டிவிடெண்டுக்கு தகுதியான பங்குதாரர்களை அடையாளம் கான, பதிவு தேதியாக ஜூலை 20, 2022-ஐ நிர்ணயம் செய்துள்ளது. இந்த டிவிடெண்டினை ஆகஸ்ட் 2, 2022 அன்று செலுத்தவும் திட்டமிட்டுள்ளது.
அட்ரிஷன் விகிதம்
ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் 6089 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தியுள்ளது. இதன் மூலம் அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது, 2,10,966 பேராகும். இது சர்வதேச ஊழியர்களையும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் முதல் காலாண்டில் அட்ரிஷன் விகிதம் 23.8% மேலாக உள்ளது. ஹெச்சிஎல் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 28.30% பெண்களாகும். இது மொத்தம் 52 நாடுகளை சேர்ந்த 162 பிரிவினை பணியமர்த்தியுள்ளது.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
இன்று இப்பங்கின் விலையானது என் எஸ் இ-ல் 1.67% குறைந்து, 927.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 924.40 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலையும் 924.40 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்சம் 1377.75 ரூபாயாகும். இதன் இன்றைய உச்ச விலை 948.55 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-ல் இப்பங்கின் விலையானது 1.63% குறைந்து, 928.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 925 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலையும் 925 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்சம் 1377 ரூபாயாகும். இதன் இன்றைய உச்ச விலை 948. 50 ரூபாயாகும்.
HCL declares interim dividend of Rs.10 per share, net profit jump 2.4%
HCL declares interim dividend of Rs.10 per share, net profit jump 2.4%/ஹெச்சிஎல் கொடுத்த சூப்பர் அப்டேட்.. பங்கு முதலீட்டாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!