இலங்கை மக்கள் மோசமான நிலையிலும் தங்களை சிரித்த முகத்துடன் வரவேற்றதாக, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பியுள்ளது. அந்த அணியின் வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னரும் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இலங்கை பயணத்தை மறக்க முடியாது எனவும், அடுத்த முறை குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
PC: Ishara S. Kodikara/AFP/Getty
மேலும் அவர் தனது பதிவில், ‘மிகவும் கடினமான சூழலில் எங்களை இங்கு உபசரித்த இலங்கைக்கு நன்றி. இங்கு வந்து விரும்பும் விளையாட்டை நாங்கள் விளையாடுவதற்கு மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறோம்.
மேலும், நீங்கள் அனைவரும் எங்களை ஆதரிக்கிறீர்கள் என்பதை அறிவோம். நீங்கள் எங்களுக்காக திறந்த மனதுடன் கைகொடுத்து வரவேற்றீர்கள்.
PC: Getty Images
இந்த பயணத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம்.
அற்புதமான இந்த நாட்டை பற்றி கூற வேண்டும் என்றால், எந்த சூழ்நிலையிலும் உங்கள் முகத்தில் எப்போதும் புன்னகையுடன் வரவேற்பீர்கள்.
ஒருநாள் எனது குடும்பத்துடன் விடுமுறைக்காக இங்கு வருவேன். ஆனால் அந்த நாளுக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை, மிக்க நன்றி’ என தெரிவித்துள்ளார்.
PC: AP Photo