4 உருளைகிழங்கு சிப்ஸ் 15,800 ரூபாயா.. ஆடிப்போன கஸ்டமர்..!

உருளைகிழங்கு என்பது இந்தியர்களுக்கு பிடித்தமான ஒன்று. அதிலும் உருளைகிழங்கில் செய்யப்படும் கிரிஸ்பியான பிரெஞ்சு பிரைஸ் என்பது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையில் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும்.

பொதுவாக பீட்சா பர்கருடன் சேர்த்து உண்ணும் இந்த பிரெஞ்சு பிரைஸானது விலை சற்று அதிகம் தான்.

ஆனால் ஒரு பிளேட் பிரெஞ்சு பிரைஸ் 15,800 ரூபாய் என்பது கொஞ்சம் ஓவர் தான். அதெல்லாம் சரி, இந்தளவுக்கு விலை உள்ளதே அப்படி என்ன ஸ்பெஷல்? எதனால் இவ்வளவு விலை?

முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

என்னாது ரூ.15,800

என்னாது ரூ.15,800

என்ன கொடுமைய்யா இது? ஒரு பிளேட் பிரெஞ்சு பிரைஸ் 15,800 ரூபாயா? இந்த காசில் 300 கிலோவுக்கு மேல் உருளைகிழங்கு வாங்கிடலாமே? இது உண்மையா? நிஜமாவே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா? எங்கு நடந்துள்ளது. அப்படி என்ன ஸ்பெஷல் வாருங்கள் பார்க்கலாம்.

 புகழ்பெற்ற பிரெஞ்சு பிரைஸ்

புகழ்பெற்ற பிரெஞ்சு பிரைஸ்

கடந்த 2021ம் ஆண்டில் நியூயார்க் நகத்தில் உள்ள Serendipity3 என்ற உணவகத்தில் தான் இந்த விலை உயர்ந்த பிரெஞ்சு பிரைஸ், கின்னஸ் சாதனையை படைத்தது. தற்போது அவை மீண்டும் உணவகத்திற்கு கொண்டு வர திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜூலை 13 அன்று தேசிய பிரெஞ்சு பிரைஸ் தினத்தினை குறிக்கும் வகையில், புகழ்பெற்ற Crème de la Crème Pommes Frites என்ற பிரெஞ்சு பிரைஸினை விற்பனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

என்ன சிறப்பு
 

என்ன சிறப்பு

இதன் அமெரிக்க விலை 200 டாலர்களாகும். இந்த புகழ்பெற்ற மக்களின் விருப்பமான பிரெஞ்சு பிரைஸ், பிரீமியம் சிப்பர்பெக் உருளைக்கிழங்கில் தயாரிக்கப்படுகின்றது. இது தென் மேற்கு பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தூய்மையான வாத்து கொழுப்பில் மூன்று முறை சமைக்கப்படுகிறது.

இன்னுல் லிஸ்ட் உண்டு

இன்னுல் லிஸ்ட் உண்டு

இதில் இன்னும் கூடுதல் சுவைக்காக செர்ரியுடன், தங்க துகள்கள் (23K edible gold dust) கலந்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேற்கண்ட இந்த நியூயார்க் உணவகத்தில் மிக விலையுயர்ந்த பர்கரினையும் கொண்டுள்ளது. அவற்றின் விலை ஒவ்வொன்றுக்கும் 295 டாலர்களாகும். 1000 டாலர் மதிப்புள்ள ஐஸ்கிரீம் (ice cream sundaes)களும் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

This is the world’s costliest French fry: just ₹15,800

This is the world’s costliest French fry: just ₹15,800/4 உருளைகிழங்கு சிப்ஸ் 15,800 ரூபாயா.. ஆடிப்போன கஸ்டமர்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.