ஓலா மீது அபராதம் விதித்த ஆர்பிஐ.. எதற்காக தெரியுமா..?!

எலக்ட்ரிக் வாகன விற்பனையில் மோசமான வர்த்தக நிலையை எதிர்கொண்டு இருக்கும் ஓலா நிறுவனம் சமீபத்தில் நிதி நெருக்கடி காரணமாகச் சமீபத்தில் துவங்கிய இரு முக்கியமான வர்த்தகப் பரிவான ஓலா கார்ஸ், ஓலா டேஷ் ஆகியவற்றை மொத்தமாக மூடியது மட்டும் அல்லாமல் செலவுகளைக் குறைக்க 700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதற்கான பணிகளில் உள்ளது.

இந்த நிலையில் ஆர்பிஐ ஓலா நிறுவனத்தின் மீத வித்துள்ள அபராதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

புள்ளி கோலத்தில் மாதம் ரூ.75,000 வருமானம்.. அசத்தும் ஸ்ரீரங்கம் தீபிகா.. எப்படி தெரியுமா..?

ஓலா

ஓலா

இந்தியாவில் இருக்கும் பிற பெரு நிறுவனங்களைப் போலப் பல துறையில் வர்த்தகம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுக் களமிறங்கிய ஓலா அடுத்தடுத்து பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. ஒருபக்கம் வர்த்தகங்களை அடுத்தடுத்து மூடி வரும் வேளையில் மறுபுறம் ஆர்பிஐ அபராதம் விதித்துள்ளது.

ஓலா பைனான்சியல் சர்வீசஸ்

ஓலா பைனான்சியல் சர்வீசஸ்

இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாயன்று ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மீது 1.67 கோடி ரூபாய் அளவிலான தொகையை அபராதமாக விதித்தது உள்ளது.

பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007ன், பிரிவு 30ன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை குறைபாடு
 

ஒழுங்குமுறை குறைபாடு

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை உள்ள குறைபாடுகளைத் தொடர்புடையது மற்றும் அதன் வாடிக்கையாளர்களுடன் நிறுவனம் மேற்கொண்டுள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்திலும் இது தொடர்புடையது அல்ல என்றும் ஆர்பிஐ விளக்கம் கொடுத்துள்ளது. சமீப காலமாக அனைத்து வங்கி மற்றும் நிதி சேவை அமைப்புகளை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுகிறதா எனத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

தீ விபத்து

தீ விபத்து

ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டங்கள் தீ பிடித்து எரிந்த சம்பவத்தின் அதிர்வுகள் முழுமையாகத் தீரும் முன்பு ஓலா நிறுவனம் தனது பேமெண்ட் முறையில் முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளது.

விற்பனை சரிவு

விற்பனை சரிவு

ஓலா எலக்ட்ரிக் வாகனத்தை வாங்குவோர் அத்தொகையைப் பல பகுதியாகப் பிரித்துப் பணம் செலுத்தும் சேவை அளித்து வந்தது, இதைத் தற்போது சிங்கிள் பேமெண்ட் சேவையாக மாற்றியுள்ளது. இதன் பின்பு வெறும் 2 வாரத்தில் ஓலா நிறுவனத்தின் விற்பனை சுமார் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

ஓலா நிறுவனம் நிதி நெருக்கடியில் மாட்டியுள்ள நிலையில் இந்த வருடத்திற்கான சம்பள உயர்வைத் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்போவது இல்லை என்று அறிவித்துள்ளது. இதேபோல் ஓலா நிறுவனம் அனைத்து வர்த்தகப் பிரிவுகளில் இருந்தும் பல அடுக்குகளில் இருந்தும் 400 முதல் 500 ஊழியர்களை வரையில் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது.

100 கோடீஸ்வரர்களை உருவாக்கும் இட்லி மாவு நிறுவனம்.. அடேங்கப்பா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI imposes penalty of 1.67 crores on Ola Financial Services

RBI imposes penalty of 1.67 crores on Ola Financial Services ஓலா மீது அபராதம் விதித்த ஆர்பிஐ.. எதற்காகத் தெரியுமா..?!

Story first published: Tuesday, July 12, 2022, 20:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.