Bitcoin விலை 19700 கீழ் சரிவு.. டாலர் ஆதிக்கம் ஆட்டிப்படைக்கிறது..!

அமெரிக்க டாலர் மதிப்பு 2002க்கு பின்பு முதல் முறையாக யூரோவுக்கு நிகராக உயர்ந்துள்ள நிலையில் கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் பதிவாகியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் ஜூன் மாதப் பணவீக்க தரவுகளுக்காகவும், அதைத் தொடர்ந்து மத்திய வங்கிகள் எடுக்கும் முடிவிற்காகவும் காத்திருக்கின்றனர். இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஆசியச் சந்தை சரிவுடன் முடிந்தது. இதன் எதிரொலியாகக் காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.60 என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது.

இதேபோல் புதன்கிழமை அமெரிக்கா தனது பணவீக்கத்தை வெளியிடுகிறது. இந்தியா முதல் அமெரிக்கா வரையில் அனைத்து நாடுகளும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதில் உறுதியாக உள்ளது.

இந்தியா – ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..!

பிட்காயின்

பிட்காயின்

பிட்காயின் மதிப்பு இன்றைய மோசமான வர்த்தகத்தில் அதிகப்படியான முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்து வரும் காரணத்தால் பிட்காயின் மதிப்பு 19,700 டாலர் வரையில் சரிந்தது. இதன் மூலம் பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டனர்.

பிட்காயின் விலை

பிட்காயின் விலை

கடந்த வார நிலவரத்தின் படி பிட்காயின் விலை 21,800 டாலர் அளவில் இருந்த வேளையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஆசிய சந்தையில் நிலவிய விற்பனை காரணமாக 20,500 டாலாராகச் சரிந்தது.

முதலீட்டு சந்தை
 

முதலீட்டு சந்தை

இதைத் தொடர்ந்து 2 நாள் வர்த்தகத்தில் பிட்காயின் பணவீக்கம் தரவுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் வட்டி விகித உயர்வு மூலம் முதலீட்டுச் சந்தையில் பதிவாகும் முதலீட்டு மாற்றங்களின் அதிர்வுகள் மூலம் இன்று பிட்காயின் அதன் 20000 டாலர் என்ற சப்போர்ட் அளவுகளை இழந்து 19,700 டாலரை தொட்டு உள்ளது.

கிரிப்டோகரன்சி விலை

கிரிப்டோகரன்சி விலை

  • பிட்காயின் – 19,904.01 டாலர்
  • எதிரியம் – 1,076.06 டாலர்
  • டெதர் – 0.999 டாலர்
  • USD காயின் – 1.0000 டாலர்
  • பினான்ஸ் – 226.57 டாலர்
  • பினான்ஸ் USD – 1.00 டாலர்
  • ரிப்பிள் – 0.3128 டாலர்
  • கார்டானோ – 0.4331 டாலர்
  • சோலானா – 34.09 டாலர்
  • டோஜ்காயின் – 0.0617 டாலர்
  • டாய் – 1.0000 டாலர்
  • போல்காடாட் – 6.5200 டாலர்
  • ட்ரான் – 0.06527 டாலர்
  • ஷிபா இனு – 0.0000104 டாலர்
  • UNUS SED LEO – 5.37 டாலர்

தலைகீழாக மாறும் கோயம்புத்தூர்.. இனி இதுதான் நிரந்தரம்..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bitcoin price fall to 19700 today Amid Recession fear and dollar domination

Bitcoin விலை 19700 கீழ் சரிவு.. டாலர் ஆதிக்கம் ஆட்டிப்படைக்கிறது..! Bitcoin price fall to 19700 today Amid Recession fear and dollar domination

Story first published: Tuesday, July 12, 2022, 21:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.