மத்திய பிரதேச மாநிலம், ஷியோபோர் எனும் இடத்தில் ஓடும் சாம்பல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான் 10 வயது சிறுவன். திடீரென சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர்.
அப்போது ஆற்றில் இருந்த முதலை அந்த சிறுவனை உயிரோடு அப்படியே விழுங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், முதலையிடமிருந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சிறுவனை முதலை மொத்தமாய் விழுங்கியுள்ளது.
உடனே அங்கிருந்தவர்கள் முதலையை கயிறு வீசி பிடித்து கரைக்கு இழுத்து வந்தனர். தகவல் அறிந்து காவல் துறையினரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அவர்கள் கிராம மக்களிமிருந்து முதலையை விடுவிக்க முயன்றபோது “சிறுவன் உயிருடன் தான் இருப்பான், அவனை முதலை கக்கும் வரை முதலையை விட மாட்டோம்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வனத் துறையினர் முதலையை மீட்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.