Rs.500 crore wealth finds in IT raid at two contractors: இரண்டு அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறைச் சோதனையில், கணக்கில் வராத ரூ.500 கோடி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு ஒப்பந்தகாரர் செய்யாதுரை. நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்ததாரரான இவரின் வீடு மற்றும் இவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த 6 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மேலாக சோதனை நடத்தினர்.
இதையும் படியுங்கள்: உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்… தி.மு.க அதிக இடங்களில் வெற்றி
இதேபோல், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் மற்றும் அவரின் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சந்திரசேகரும் அரசு ஒப்பந்தகாரராக இருந்து வருகிறார். இவர் கோவை அ.தி.மு.க மாவட்ட பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருந்து வருகிறார்.
இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு தொடர்புடைய 40 இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் முடிவில் இரண்டு ஒப்பந்ததாரர்களும் கணக்கில் வராத ரூ.500 கோடியை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசு ஒப்பந்ததாரர்களான இவர்கள், போலியான கணக்குகளை காட்டி இந்த வருமானத்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. போலி ரசீது மற்றும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாமல் ஒப்பந்ததாரர்கள் இருவரும் வருமானத்தை மறைத்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.