கரூர் வைஸ்யா வங்கி களமிறக்கிய புதிய தலைவர் மீனா.. யார் இவர் தெரியுமா..?!

இந்திய வங்கி மற்றும் நிதியியல் சேவை துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் பல பரிமாணங்களில் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

இந்தக் கடுமையான போட்டி மிகுந்த சந்தையில் ஏற்கனவே தனியார் வங்கிகள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில் அதீத முதலீட்டு உடன் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் களமிறங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கரூர் வைஸ்யா வங்கி தான் இருக்கும் இடத்தை வலிமைப்படுத்திக்கொண்டு அடுத்தகட்டத்திற்கு நகர்வது குறித்துத் திட்டமிட்டுப் புதிதாக ஒருவரைத் தலைவராக நியமித்துள்ளது.

4 வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி

தமிழ்நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் பகுதி நேர தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் நிர்வாகி மீனா ஹேமச்சந்திராவை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

பகுதிநேர தலைவர்

பகுதிநேர தலைவர்

மே மாதம், கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாகமற்ற சுயாதீன (பகுதிநேர) தலைவர் பதவிக்கு (non-executive independent) மீனா ஹேமச்சந்திரா-வின் நியமத்திற்கு வங்கி நிர்வாகம் ஒப்புதலுக்காக ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரைத்தது.

ஆர்பிஐ ஒப்புதல்
 

ஆர்பிஐ ஒப்புதல்

இந்நிலையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை 11, 2022 தேதியிட்ட கடிதத்தின், மீனா ஹேமச்சந்திராவை வங்கியின் பகுதிநேர தலைவராக அதாவது சேர்மன் ஆக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது எனக் கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மீனா ஹேமச்சந்திரா

மீனா ஹேமச்சந்திரா

64 வயதாகும் மீனா ஹேமச்சந்திரா-வின் பதவிக்காலம், பொறுப்பேற்ற நாளிலிருந்து 3 வருட காலத்திற்கு மட்டுமே செல்லுப்படியாகும். ரிசர்வ் வங்கியின் பல்வேறு துறைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டர் மீனா ஹேமச்சந்திரா.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ஜூன் 2015 முதல் நவம்பர் 2017 வரை ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக மீனா ஹேமச்சந்திரா இருந்துள்ளார், இவரின் வருகை மூலம் கருர் வைஸ்யா வங்கியின் நிர்வாகம் மேம்படுவது மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகப் பிரிவில் இறங்க பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

கரூர் வைஸ்யா வங்கி பங்குகள்

கரூர் வைஸ்யா வங்கி பங்குகள்

கரூர் வைஸ்யா வங்கியின் பங்குகள் பிஎஸ்இ-யில் 0.63 சதவீதம் சரிந்து ரூ.47.40 ஆக வர்த்தகமானது. 2022 ஆம் ஆண்டில் இவ்வங்கியின் பங்கு விலை வெறும் 1.62 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் கடந்த 5 வருடத்தில் 59.36 சதவீதம் சரிந்துள்ளது.

ஆர்பிஐ சொன்ன டக்கரான மேட்டர்.. ஆனா ஒரு செக் இருக்கு..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Karur Vysya Bank appoints Meena Hemchandra as part-time chairman; RBI Approved

Karur Vysya Bank appoints Meena Hemchandra as part-time chairman; RBI Approved கரூர் வைஸ்யா வங்கி களமிறக்கிய புதிய தலைவர் மீனா.. யார் இவர் தெரியுமா..?!

Story first published: Tuesday, July 12, 2022, 20:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.