டெல்லி: மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 17ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.