இந்தியாவில் அறிமுகமானது 'நத்திங் போன் (1)' | விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது ‘நத்திங் போன் (1)’. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அதோடு இந்த போனுக்கான விலையில் அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக சலுகை குறித்தும் பார்ப்போம்.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட்டை விற்பனை செய்து வருகிறது. இத்தகைய சூழலில் போன் (1) குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் வாக்கில் வெளியிட்டிருந்தது நத்திங். அப்போது முதலே இந்த போன் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. அதற்கு காரணம் அதன் நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்போது இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது நத்திங் நிறுவனத்தின் போன் (1) ஸ்மார்ட்போன். லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் இந்த போனின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. ப்ரீமியம் மிட் ரேஞ்சில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட்டை கொண்டுள்ளது இந்த போன்.
  • 6.55 இன்ச் ஃபுள் ஹெச்.டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த போன். 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சேம்பிளிங் ரேட் கொண்டுள்ளது. கொரில்லா கிளாஸ் 5 புரொட்டக்ஷனும் இதில் உள்ளது.
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த போன். மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. இரண்டும் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் உள்ள செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சலை கொண்டுள்ளது.
  • 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது இந்த போன். 4,500 mAh பேட்டரியும் இதில் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் இந்த போனின் பாக்ஸில் சார்ஜர் இடம்பெறவில்லை.
  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்டுகளில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது. மூன்று வேரியண்ட்டும் முறையே 32999, 35999 மற்றும் 38999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த போன் கிடைக்கும்.
  • வரும் 21-ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
— Nothing (@nothing) July 12, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.