ஆகஸ்ட் 30ம் திகதி வரை எரிவாயுக்கு தட்டுப்பாடு இல்லை

ஆகஸ்ட் 30ம் திகதி வரை எரிவாயு தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் நேற்று  30 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களையும் இன்று (12)  ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கவுள்ளது

கொழும்பில் 30 ஆயிரம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க நேற்று  நிறுவனம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.. இன்றும் நாடு முழுவதும் 120 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் (12.5மப) விநியோகிக்க உள்ளதாகவும் லிற்றொ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்

12.5 கிலோ எடை கொண்ட 80 ஆயிரம் சிலிண்டர்களும், 5 கிலோ எடையுள்ள 20 ஆயிரம் சிலிண்டர்களும், மேலும் 2.3 கிலோ எடையுள்ள 20 ஆயிரம் சிலிண்டர்களும் இன்று விநியோகிக்கப்படும் என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இருபதாயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு மாலைதீவில் இருந்து வர உள்ளதாகவும், ஜூலை 20க்கு பிறகு மேலும் 4 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் எதிர்வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் எரிவாயு சிலிண்டர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்  

மேலும் 12.5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலை கொடுத்து எரிவாயு சிலிண்டர்களை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பில் அதிகபட்ச விலையைத் தவிர ஏனைய மாகாணங்களில் எரிவாயு சிலிண்டர்களின் விற்பனை விலையுடன் ரூ.35 முதல் போக்குவரத்துக் கட்டணமும் சேர்க்கடும் என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்.

எங்களிடம் ஜூலை 31 வரை போதுமான 33 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு இருப்பு உண்டு மேலும் ஆகஸ்ட் இறுதி வரை முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை தவிர மேலதிகமாக ஒரு இலட்சம் சிலிண்டர்கள் கைவசம் உள்ளதாகவும் லிற்றொ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.