சென்னை: திராவிடம் தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் திமுக அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் ஆளுநர் பேசுவதாகவும் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். ஆளுநரின் பதவிக்கு இழுக்கு நேரிடும் வகையில் சர்ச்சைக்குரிய கொள்கைகள் பற்றி ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசுவதாக கீ.வீரமணி சாடியுள்ளார்.