துணை ராணுவப் படை உள்ளிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பணிகளில் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினர்கள், குழந்தைகளின் வயது, நிதித் தேவைகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, விண்ணப்பங்கள் வரிசைப்படுத்தப்படும்.
பின்னர் சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு வேலைக்கு சேருவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
தொடர்ந்து 3 அதிகாரிகள் கொண்ட குழு அளிக்கும் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு வேலை வழங்கப்படும் என மத்திய உள்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.