சருமம், கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொய்யா இலை! இப்படி பயன்படுத்தி பாருங்க


  கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

குறிப்பாக கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.

கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தன்மை அதிகம் உள்ளது,எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.

அதுமட்டுமின்றி கொய்யா இலைகள் சருமம், கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தருகின்றது. தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

சருமம், கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொய்யா இலை! இப்படி பயன்படுத்தி பாருங்க | Guava Leaves Benefits For Hair And Skin

  • கொய்யா இலைகளை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் முகச்சுருக்கங்கள் மறையும். இளமை ததும்பும்.
  • கொய்யா இலைகளை ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்நது செய்து வந்தால் அழகு அள்ளும்.
  • கற்றாழை சாறுடன் கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

  • கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து பூசி வந்தால் முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும்.

  • கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி பலம் பெறும்.

  • கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும். மேலும் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.