இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஜூன் மாதம் நுகர்வோர் பணவீக்கம் 54.6 சதவீதமாக உயர்ந்துள்ளது உலக நாடுகளையும், ஐஎம்எப் அமைப்பையும் பயமுறுத்தியுள்ளது. மேலும் இலங்கையின் உணவு பணவீக்கம் 80.1 சதவீதமாகவும், போக்குவரத்துப் பணவீக்கம் 128 சதவீதமாக அதிகரித்துள்ளது. அப்போ இந்தியாவின் நிலை என்ன..?
செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் முதல் பணவீக்க தரவுகள் வெளியாகும் நிலையில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது. இதோடு புதன்கிழமை அமெரிக்காவும் இந்தியாவைப் போல் ஜூன் பணவீக்க தரவுகளை வெளியிடுகிறது.
ஜூன் மாதம் சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் ரீடைல் பணவீக்க தரவுகள் இன்று வெளியாகியுள்ளது.
சென்னையில் புதிய எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை.. முருகப்பா குரூப் செம அறிவிப்பு..!
சில்லறை பணவீக்கம்
கச்சா மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, மே மாதத்தில் 7.04% ஆக இருந்த இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 7.01% ஆகக் குறைந்துள்ளது.
முக்கியப் பணவீக்கம் அளவீடு
இதுவே கடந்த சில மாதங்களை ஒப்பிடும் போது மே மாதத்தில் 0.94% ஆக இருந்த பணவீக்கம் ஜூன் மாதம் 0.52% ஆகக் குறைந்தது. முக்கியப் பணவீக்கம் (Core Inflation) அதாவது உணவு மற்றும் எரிபொருள் பிரிவுகளைத் தவிர்த்து ரீடைல் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6% ஆக இருந்தது.
உணவுப் பணவீக்கம்
மொத்த உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.75% ஆக இருந்தது, இது முந்தைய மே மாதத்தில் 7.97 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தில் காய்கறிகளின் பணவீக்கம் 17.37% அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்திய முக்கிய உணவின் முக்கிய அங்கங்களில் ஒன்றான பருப்பு வகைகள் ஜூன் மாதத்தில் 1.02% குறைந்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம்
எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம் மே மாதத்தில் 9.54 சதவீதமாக இருந்து ஜூன் மாதத்தில் 10.39% ஆக உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம் தான் நுகர்வோர் சந்தையைப் பாதிக்கும் முக்கியக் காரணியாக உள்ளது.
ஆறாவது மாதம்
இருப்பினும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஆறாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கான 2 முதல் 6 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இன்னும் ஒரு காலாண்டிற்கு 6 சதவீதத்திற்கு மேல் இருந்தால் அதற்கான காரணங்களை ரிசர்வ் வங்கி கடிதம் எழுதி அரசுக்கு விளக்க வேண்டும்.
கலால் வரி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிக் குறைப்புகளுடன் உணவு ஏற்றுமதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் பணவீக்கத்தைக் குறைக்க அதிகளவில் உதவியுள்ளது. எவ்வாறாயினும், எதிர்பாராத வெப்ப அலைகளின் பின்னணியில் உணவு விலைகள் முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் உயர்ந்து வருவதால், இந்தச் சரிவு தற்காலிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஜூலை மாதம் நாடு முழுவதும் மழை பெய்து வரும் காரணத்தாலும் உற்பத்தியும் விலையும் மாறுபடலாம்.
தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!
Retail inflation fall to 7.01 percent in June, food inflation weights
Retail inflation fall to 7.01 percent in June, food inflation weights ரீடைல் பணவீக்கம் கணிசமாகச் சரிவு.. உணவு பணவீக்கம் அதீத சுமை..!