இலங்கை மக்கள் அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டை சூறையாடி வரும் வேளையில் மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்திச் செய்யக் குறைந்தது 6 பில்லியன் டாலர் தேவை எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் யார் ஆட்சி அமைக்கப்போவது என்ற முக்கியமான கேள்வி எழுந்துள்ள வேளையில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக எதிர்வரும் ஜூலை 20ஆம் தேதி நடத்தப்படும் தேர்தலில் நிற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை பதவி விலக உள்ளார்.
இப்படி மக்களும் அரசும் மோசமான நிலையில் இருக்கும் வேளையில் இலங்கையில் விலைவாசி என்ன தெரியுமா.. கேட்டா உண்மையில் ஷாக் ஆகிடுவீங்க..
விளாடிமிர் புதினின் புதிய ஆயுதம்.. நடுங்கும் ஐரோப்பா.. அமெரிக்கா வருமா..?!

இலங்கை
இலங்கை ஆங்கிலேயரிடம் 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சாமானிய மக்களின் அடிப்படைத் தேவையாக விளங்கும் காய்கறிகளின் விலைகள் விண்ணைத் தொட்டு உள்ளது.

அரிசி விலை
ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு கிலோவிற்கு 145 ரூபாயாக இருந்த அரிசியின் விலை 230 ரூபாயாக அதிகரித்துள்ள, அதே வேளையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

வெங்காயம், தக்காளி
வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.200 ஆகவும் (இலங்கை ரூபாய்), உருளைக்கிழங்கு விலை கிலோவுக்கு ரூ.220 ஆகவும் உயர்ந்தது. தக்காளி கிலோ 150 ரூபாய்க்கும், கேரட் கிலோ 490 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஜூன் மாத பணவீக்கம்
இதேவேளையில் ஜூன் மாதம் இலங்கையில் நுகர்வோர் பணவீக்கம் 54.6 சதவீதமாக உயர்ந்துள்ளது, இதேபோல் உணவு பணவீக்கம் 80.1 சதவீதமாகவும், போக்குவரத்துப் பணவீக்கம் 128 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இலங்கை தனது வரலாற்றில் பார்த்திராத மோசமான நிலையாகும்.

பெட்ரோல், டீசல்
இதேவேளையில் இலங்கையில் ஒரு லிட்டர் இலங்கை ரூபாய் மதிப்பில் 470 ரூபாய், டீசல் விலை ஒரு லிட்டர் 460 ரூபாய். மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாய் மதிப்பு 359.78 ரூபயாக உள்ளது. எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் இலங்கையில் சைக்கிள் விலை அதிகரித்து, 1.2 லட்சம் ரூபாய் விலையில் விற்கப்படுவதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

6 பில்லியன் டாலர் தேவை
2023ஆம் ஆண்டு முடியும் வரையில் அந்நாட்டு மக்களுக்குப் போதுமான உணவு பொருட்கள் குறிப்பாக அடிப்படையாகத் தேவைப்படும் உணவு பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றை வாங்க சுமார் 6 பில்லியன் டாலர் தேவை. 6 பில்லியன் டாலர் இருந்தால் மட்டுமே இலங்கை பொருளாதாரத்தை விளிம்பு நிலையில் இருந்து காப்பாற்ற முடியும்.
தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!
Sri Lanka potato, onion, tomato peaks; Food Inflation at 80 percent
Sri Lanka potato, onion, tomato peaks; Food Inflation at 80 percent வெங்காயம் விலை கேட்டாலே கண்ணீர் வருது.. அய்யோ தக்காளியா கேட்கவே வேண்டாம்..!