சர்வதேச ஊடகத்தின் வாயிலாக தோன்றிய அர்ஜுன் மகேந்திரன்


பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், சர்வதேச ஊடகமாக CNN இல் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் இந்த நேர்காணல் அமைந்திருந்தது.

சர்வதேச ஊடகத்தின் வாயிலாக தோன்றிய அர்ஜுன் மகேந்திரன் | Economic Crisis In Sri Lanka Cnn Arjuna Mahendran

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணங்கள்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், கோவிட் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் மற்றும் விவசாயத் துறையில் புதிய அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் ஆகியவை பிரதான காரணங்கள் என அர்ஜுன் மகேந்திரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட வரிப்பணத்தை திரட்டி விவசாய கைத்தொழிலை புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பணத்தை அச்சடித்தல் போன்றவற்றின் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றில் வழக்கு தாக்கல்

2015ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூரில் இருந்து ஒன்லைன் ஊடாக CNN செய்திச் சேவைக்கு பேட்டியளித்தார்.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் அர்ஜுன் மகேந்திரன் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை காலமும் வெளியாகியிருக்கவில்லை. இந்நிலையிலேயே, தற்போது சர்வதேச ஊடகத்தின் வாயிலாக அர்ஜுன் மகேந்திரன் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடகத்தின் வாயிலாக தோன்றிய அர்ஜுன் மகேந்திரன் | Economic Crisis In Sri Lanka Cnn Arjuna Mahendran



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.