விண்வெளியில் மில்லியன் மைல் பயணத்திற்குப் பிறகு, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோபில் இருந்து எடுக்கப்பட்ட தொலைதூர பிரபஞ்சத்தின் முதல் படத்தை நாசா மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதைத்தான் நாசா “இன்றுவரை தொலைதூர பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு படம்” என்று அழைக்கிறது.

வெப்ஸ் ஃபர்ஸ்ட் டீப் ஃபீல்ட் என அழைக்கப்படும் இது கேலக்ஸி கிளஸ்டர் SMACS 0723 ஐக் காட்டுகிறது.
தொலைநோக்கியின் அருகிலுள்ள அகச்சிவப்பு கேமரா (NIRCam) மூலம் படம் எடுக்கப்பட்டது. இதுவெவ்வேறு அலைநீளங்களில் எடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்டது.
இதுத்தவிர ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் எடுத்த, பிரபஞ்சத்தின் இதுவரை பார்த்திராத விரிவான படங்களை நாசா இன்று மாலை வெளியிடுகிறது. முன்னதாக, நாசா ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA), கனேடிய விண்வெளி நிறுவனம் (CSA) மற்றும் ஸ்பேஸ் டெலஸ்கோப் சைன்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் சர்வதேச குழுவால், முழு வண்ண அறிவியல் படங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தரவுகளின் ஆரம்ப அலைக்கான இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதோ அவை அனைத்தும்.
கரினா நெபுலா
கரினா நெபுலா வானத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் பிரகாசமான நெபுலாக்களில் ஒன்றாகும். நெபுலா என்பது விண்வெளியில் வாயு அல்லது தூசி மேகங்கள் அல்லது திரளான விண்மீன் தொகுதி காரணமாக இரவு வானில் தோன்றும் பிரகாசமான வெளிச்சம். அவை “ஸ்டெல்லர் நர்சரிஸ்” என்று குறிப்பிடப்படுகின்றன, ஏனெனில் அங்குதான் நட்சத்திரங்கள் உருவாகின்றன. கரினா’ சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்களின் தாயகமாகும். இது ஓரியன் நெபுலாவை விட நான்கு மடங்கு பெரியதாகவும் பிரகாசமாகவும் இருந்தாலும், மிகவும் குறைவாகவே அறியப்படுகிறது.
WASP-96 b (ஸ்பெக்ட்ரம் தரவு)
இது 2014 இல் கண்டுபிடிக்கப்பட்டது, WASP-96b என்பது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு பெரிய கிரகமாகும். இது 3-4 நாட்களுக்கு ஒருமுறை அதன் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது மற்றும் வியாழனின் பாதி நிறை கொண்டது.
சூரிய குடும்பத்திற்கு வெளியே நட்சத்திரத்தை சுற்றி வரும் இந்த கோள் (exoplanet), கிட்டத்தட்ட மேகங்கள் இல்லாதது மற்றும் சோடியம் மிகுதியாக உள்ளது.
சதர்ன் ரிங் நெபுலா
சதர்ன் ரிங் நெபுலா என்பது ஒரு கிரக நெபுலா ஆகும், அதாவது அது இறக்கும் நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள வாயு மேகம். தொலைநோக்கிகள் மூலம் பார்க்கும் போது இதன் உருவம்-8 போல் இருப்பதால் இது “Eight-Burst” நெபுலா என்றும் அழைக்கப்படுகிறது. இது பூமியிலிருந்து 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது மற்றும் கிட்டத்தட்ட அரை ஒளி ஆண்டு விட்டம் கொண்டது.
வாயுக்கள் நெபுலாவின் மையத்தில் இறக்கும் நட்சத்திரத்திலிருந்து நொடிக்கு ஒன்பது மைல் வேகத்தில் விலகிச் செல்கின்றன

ஸ்டீபன் குயின்டெட்
ஸ்டீபன் குயின்டெட் என்பது ஐந்து விண்மீன் திரள்களின் குழுவாகும், அவற்றில் நான்கு’ தொடர்ச்சியான நெருக்கமான சந்திப்புகளின் “காஸ்மிக் நடனத்தில்” பூட்டப்பட்டுள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதல் சிறிய விண்மீன் குழுக்களில் ஒன்றாக இது புகழ்பெற்றது. இது பெகாசஸ் விண்மீன் மண்டலத்தின் திசையில் சுமார் 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“