நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் , போலியான விண்ணப்பங்களில் சமர்ப்பிப்பது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (CERT|CC) பொது மக்களை எச்சரித்துள்ளது.
போலியான இணைப்புகளைப் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது தொடர்பான பல சம்பவங்கள் குறித்து ((CERT|CC) குழுவிடம் புகார்கள் கிடைக்கப் பெற்றள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் எரிபொருளுக்கான டோக்கனைப் பதிவு செய்து, போலியான பதிவுச் செயல்பாட்டின் போது முக்கியமான தனிப்பட்ட தகவல்களை (தொலைபேசி எண்கள், வாகனப் பதிவு எண்கள், அடையாள அட்டை எண்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவை) திருடுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். பின்னர் திருடப்பட்ட தனிப்பட்ட தகவல் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுவதாக (CERT|CC) தெரிவித்துள்ளது.