பொதுவாக ரயில் பயணம் என்பது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், சாமானிய மக்கள் மத்தியில் மிக விருப்பமான போக்குவரத்தாக உள்ளது.
இதற்கு காரணம் பாதுகாப்பு என்பது ஒன்றாக இருந்தாலும், கட்டணங்கள் குறைவு என்பது மற்றொரு முக்கிய காரணம்.
விமான பயணத்துடனோ அல்லது ஸ்லீப்பர் பேருந்துகளுடன் ஒப்பிடும்போது இந்த கட்டண விகிதம் மிக குறைவு தான்.
இந்தியா – ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..!

ஏசி பெட்டிகளை அதிகரிக்க திட்டம்
ஆனால் இனி இதற்கும் பிரச்சனை எனலாம். ஏனெனில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகள் மட்டுமே இருக்கும். மற்ற பெட்டிகள் அனைத்தும் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நார்மல் கோச்களாக இருக்கும் பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்பட்டால், கட்டணங்களும் அதிகரிக்கும்.

எந்தெந்த ரயில்கள்
இதனால் சாமானிய மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். குறிப்பாக இந்த திட்டமானது பாண்டியன், முத்து நகர், மலைக் கோட்டை, சோழன், பொதிகை, நீலகிரி உள்பட பல ரயில்களில் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்
அரசின் இந்த திட்டத்தினால் ரயில் பயணிகள் வேறு வழியின்றி ஏசி கோச்சினை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவர். இதனால் கட்டணமும் அதிகம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.
உதாரணத்திற்கு வெறும் 1000 ரூபாய் குடும்பத்தோடு பயணத்தவர்கள், இனி ஒருவர் கூட பயணிக்க முடியுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே செய்யப்பட்ட மாற்றம்
ஏற்கனவே பயணிகள் மற்றும் சாதாரண ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி, பல சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையி;ல் ஏசி பெட்டிகள் அதிகரித்தால், ஏழை எளிய மக்கள் பயணிப்பது கடினமானதாகி விடும். இனி ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி 3 பெட்டிகளை இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமானம் அதிகரிக்கும்
இவ்வாறு ஏசி 3 பெட்டிகளை அதிகரிப்பதன் மூலம் ரயில்வேற் துறைக்கு வருமானம் அதிகரிக்கும். ரயில்வே துறையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்டு வருவது நல்ல விஷயம் தான். எனினும் இதனால் சாமானிய மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். இது ஆரம்பத்தில் சில ரயில் பெட்டிகளில் மட்டுமே கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் மற்ற ரயில்களிலும் கொண்டு வரும் நிலை ஏற்படலாம். இது ஏழை எளிய மக்களின் பயணத்தை கடுமையாக்கலாம்.
indian railways new AC coach may impact poor peoples: it’s boost up charges
indian railways new AC coach may impact poor peoples: it’s boost up charges/ரயில் கட்டணங்கள் அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா.. சாமானிய மக்கள் கவலை..!