டிவிட்டர் போனா என்ன.. எலான் மஸ்க் கையில் ஜாக்பாட் இருக்கு..!

உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த எலான் மஸ்க் டிவிட்டர் கைப்பற்றல் திட்டத்தில் இரு முக்கிய காரணத்தால் திடீரென கைவிடத் திட்டமிட்டார் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்.

ஒன்று டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான போதிய பணம் இருப்பதாக முதலில் கூறிய எலான் மஸ்க் டெஸ்லா பங்குகளின் தொடர் வீழ்ச்சியின் காரணமாக போதுமான நிதியை திரட்ட முடியாமல் போனது. மற்றொன்று டிவிட்டர் நிறுவனம் கடைசி வரையில் போலி கணக்குகள் குறித்து தரவுகளை அளிக்காதது.

டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு கைப்பற்றும் திட்டம் ரத்து செய்யப்படும் என பல முறை எச்சரிக்கப்பட்டும் டிவிட்டர் போலி கணக்குகள் குறித்த தரவுகளை அளிக்காததால் எலான் மஸ்க் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்.

டிவிட்டரை கைப்பற்ற முடியாமல் போனது தோல்வியாக இருந்தாலும் எலான் மஸ்க் கையில் மிகப்பெரிய ஜாக்பாட் கையில் உள்ளது.

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை திடீரென நிறுத்திய எலான் மஸ்க்: என்ன நடந்தது?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதற்காக ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து மிகப்பெரிய தொகையை திரட்டி வைத்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி போட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் எலான் மஸ்க் கையில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான பணம் உள்ளது.

8.5 பில்லியன் டாலர்

8.5 பில்லியன் டாலர்

எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் டிவிட்டரை வாங்குவதற்காக தனது கையில் இருந்த டெஸ்லா பங்குகளில் சுமார் 96 லட்சம் பங்குகளை சராசரியாக 885 டாலருக்கு விற்பனை செய்தார். இந்த பங்கு விற்பனை மூலம் சுமார் 8.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் திரட்டினார். தற்போது இந்த பணம் அவர் வங்கி கணக்கில் ராஜா போல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.

டெஸ்லா பங்குகள்
 

டெஸ்லா பங்குகள்

டெஸ்லா பங்குகள் தற்போது 703 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில் எலான் மஸ்க் மிகவும் நல்ல விலைக்கு விற்பனை செய்து தனது நிதி நிலையை எப்போதும் இல்லாத வகையில் மேம்படுத்தியுள்ளார்.

முதலீடு

முதலீடு

இந்த பணத்தை எலான் மஸ்க் கண்டிப்பாக அப்படியே வைத்திருக்கப் போவது இல்லை, கட்டாயம் டிவிட்டர் தொடுக்கப்போகும் வழக்கு முடிந்த பின்பு புதிதாகவோ அல்லது ஏற்கனவே தான் வைத்திருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வார்.

டிசம்பர் விற்பனை

டிசம்பர் விற்பனை

எலான் மஸ்க் 2021 டிசம்பர் மாதம் ஆப்ஷன்ஸ் எக்ஸ்பைரி மற்றும் வரி செலுத்த வேண்டும் என்பதற்காக சுமார் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து பணத்தைத் திரட்டினார். ஆனால் எலான் மஸ்க்-ன் ஏப்ரல் மாத விற்பனை மூலம் டெஸ்லா பங்குகள் 19 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

லாபம்.. சுபம்..

லாபம்.. சுபம்..

எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் 96 லட்சம் பங்குகளை சராசரியாக 885 டாலருக்கு விற்பனை செய்யாமல் இருந்திருந்தால் இதன் மதிப்பு வெறும் 1.6 பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால் தற்போது எலான் மஸ்க் கையில் சுமார் 8.5 பில்லியன் டாலர் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk Twitter deal failed but Musk sits on biggest ever cash reserve

Elon Musk Twitter deal failed but Musk sits on the biggest ever cash reserve டிவிட்டர் போனா என்ன.. எலான் மஸ்க் கையில் ஜாக்பாட் இருக்கு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.