ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல் தகனம்

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தலையொட்டி கடந்த 8-ம் தேதி நாரா நகரில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று வாக்கு சேகரித்தார். அப்போது கடற்படை முன்னாள் வீரர் யாமாகாமி, அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த ஷின்சோ அபே மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது உடல் தலைநகர் டோக்கியாவில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஷின்சோ அபேவின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. டோக்கியாவில் உள்ள பவுத்த கோயிலில் அவரது உடல் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அபேவின் மனைவிஅகி, பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்பிறகு அபேயின் உடல், வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. லிபரல் ஜனநாயக கட்சி தலைமை அலுவலகம், நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று மரியாதை செலுத்தினர். இறுதியில் மயானத்தை வாகனம் சென்றடைந்தது. அங்கு பவுத்த மத வழக்கத்தின்படி ஷின்சோ அபேவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

— HoseinMortada-English (@HoseinMortada1) July 12, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.