பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் போட்டியில் இருந்து சஜித் ஜாவித் விலகியுள்ளார்.
பிரித்தானிய பிரதமராக செயல்பட்டு வந்த போரிஸ் ஜோன்சன் தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவரை தெரிவு செய்யும் முயற்சியில் கன்சர்வேடிவ் கட்சி ஈடுபட்டு வருகிறது.
தற்போது வரையில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முன்னிலை பெற்று வருகிறார். இந்த நிலையில் சஜித் ஜாவித் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் போட்டியில் களம் காண்பவர்களின் இறுதிப்பட்டியல் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் பதவிக்காக கெமி படேனோச், சுயெல்லா பிராவர்மேன், ஜெர்மி ஹன்ட், பென்னி மோர்டான்ட், ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ், டாம் துகென்தாட் மற்றும் நாதிம் ஜஹாவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தலைவர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என சஜித் ஜாவித் அறிவித்த சில நிமிடங்களில் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, Rehman Chishti, போக்குவரத்து அமைச்சர் Grant Shapps ஆகியோரும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், ரிஷி சுனக் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட தமது ஆதரவையும் Grant Shapps தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் துணைப் பிரதமர் டொமினிக் ராப் தமது ஆதரவை ரிஷி சுனக்குக்கு தெரிவித்துள்ளார்.