பையனூரில் திரைப்பட தொழிலாளர் குடியிருப்பு : அமைச்சருடன் திரைத்துறையினர் ஆலோசனை

திரைப்படத் தொழிலாளர்களுக்காக செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் போன்ற பொது பயன்பாடுகளும் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த பணிகளை மீண்டும் தொடரும் வகையில் மூன்று ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு தரவேண்டும் மற்றும் திரைப்பட அரங்குகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, கவுரவ செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கதிரேசன், பெப்சி தலைவர் ஆர்கே.செல்வமணி, துணைத் தலைவர் செந்தில், பொருளாளர் சுவாமிநாதன், சின்னத்திரை நடிகர் சங்க பொதுச்செயலாளர் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர். முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.