கொரோனா உதவி, நிவாரண திட்டத்துக்கு ரூ.50 கோடி, காலநிலை மாற்ற இயக்கத்திற்கு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை:  தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்த 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், காலநிலை மாற்ற இயக்கத்திற்கு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கியும் தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் பயணடையும் வகையில் தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் என்ற புதிய திட்டம் 50 கோடி ருபாய் நிதி உதவியுடன் செயல் படுத்தப்படும் என சட்டப்பேரவையில் குரு ,சிறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள்துறை  அமைச்சர் தாமு.அன்பரசன் அறிவித்தார்.  அதனை செயல்படுத்தும் விதமாக தொழில் முனைவோர் தங்களது தொழிலை நேரடியாகவோ,வாரிசுதாரர் மூலமாகவோ மீண்டும் அமைக்கவோ அல்லது புதிய தொழில் தொங்கவோ உதவிடும் வகையில் 25 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் திட்டம்  செயல்படுத்தப்படும்.

பெரும் நிதி சிரமத்திற்குள்ளான நிறுவனங்கள், உற்பத்தி திறனை மேம்படுத்த 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு மானியத் திட்டம் அறிமுக படுத்தபடும் என்றும், இத்திட்டத்திற்கு 21 வயது முதல் 55 வயது வரை உள்ள 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழில் செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதனை செயல்படுத்தும் விதமாக தொழில் முனைவோர் தங்களது தொழிலை நேரடியாகவோ,வாரிசுதாரர் மூலமாகவோ மீண்டும் அமைக்கவோ அல்லது புதிய தொழில் தொங்கவோ உதவிடும் வகையில் 25 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் திட்டம்  செயல்படுத்தப்படும்.

பெரும் நிதி சிரமத்திற்குள்ளான நிறுவனங்கள், உற்பத்தி திறனை மேம்படுத்த 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு மானியத் திட்டம் அறிமுக படுத்தபடும் என்றும், இத்திட்டத்திற்கு 21 வயது முதல் 55 வயது வரை உள்ள 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழில் செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகஅரசு வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில், தமிழ்நாட்டில் காலநிலை மாற்ற இயக்கத்திற்கு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கப்பட்ட்டுள்ளது. மாவட்டந்தோறும் காலநிலை மாற்ற இயக்கத்திற்காக தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.