சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே பதவி விலகல் கடிதத்தினை கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவை சென்றடைந்தனர்.
சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே பதவி விலகல் கடிதம்
இந்தநிலையில் ஜனாதிபதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கை அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி டொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருந்தது.
தற்போது, சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே பதவி விலகல் கடிதத்தை கோட்டாபய அனுப்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.