டெல்லி: ஜூலை 15-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூஸ்டர் டோஸ் அனைவரும் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் ஈன ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வரும் 15-ம் தேதி முதல் 18 – 59 வயது உள்ளவர்களுக்கும் போஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஜூலை 15-ம் தேதி முதல் செப். 28-ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அரசு தெரிவித்துள்ளது.