உத்தரப்பிரதேச மாநிலத்தில் மழைக் கடவுளை மகிழ்விக்க பாஜக எம்.எல்.ஏ.வை பெண்கள் சேற்றில் குளிப்பாட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் பகுதியில் வசிப்பவர்கள் மழைக் கடவுளை மகிழ்விக்க ஒரு புதுவழியைக் கண்டுபிடித்து உள்ளனர். மழைக் கடவுளான இந்திரனை மகிழ்விப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பாஜக எம்எல்ஏ ஜெய் மங்கள் கனோஜியா மற்றும் நகராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ண கோபால் ஜெய்ஸ்வால் ஆகியோரை சேற்றால் குளிப்பாட்டி உள்ளனர்.
உத்திரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வசிப்பவர்கள் ஒருவரை சேற்றில் வீசுவது அல்லது குளிப்பது மழையின் கடவுளான இந்திரனை மகிழ்விக்கும் என்று நம்புகிறார்கள். பாஜக எம்எல்ஏ மற்றும் நகர்மன்றத் தலைவர் இருவரையும் குளிப்பாட்டிய பிறகு பேசிய பெண்கள் “இப்போது இந்திரன் மகிழ்ச்சியாக இருப்பார். இனி நன்றாக மழை பொழிய வேண்டும்” என்று தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ ஜெய் மங்கள் கனோஜா “இந்த காலநிலையில் மக்கள் அவதிப்படுகிறார்கள். வெப்பம் காரணமாக மக்கள் சிரமப்படுகின்றனர். பயிர்கள் காய்ந்து வருகின்றன. இது ஒரு பழைய நம்பிக்கையின் அடிப்படையிலான சடங்கு. எனவே நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க முடிவு செய்தோம்,”என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM