நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக 35 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குறித்த அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமனம்
இந்நிலையில், பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், இதனை ஏற்காத போராட்டகாரர்கள் பிரதமர் செயலகத்தை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சபாநாயகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும், நாடாளுமன்றத்திற்குள்ளும் பிரவேசிக்க முற்பட்டுள்ளனர். இதனால் பாதுகாப்ப தரப்பினர்களுக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
இதனையடுத்து இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.