வாஷிங்டன்: இந்தாண்டு ஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துக்கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த, ‘கூகுள்’ நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் பல்வேறு சேவைகளை, அளித்து வருகிறது.தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தைசேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை இ.மெயில் மூலம் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடித்தில்,
இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், நடப்பு ஆண்டுக்கான வேலைக்கு ஆள் சேர்ப்பை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய மாதங்களில் புதிய வேலைவாய்ப்புகள் குறைவான அளவிலேயே உருவாக்கப்படும். எனினும் இந்தாண்டு பொறியியல், தொழில்நுட்ப பிரிவுகளில் ஆட்களை சேர்க்க கவனம் செலுத்தப்படும். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement