உலக நாடுகள் கொரோனா-வில் இருந்து கூடத் தப்பித்து விட்டது, ஆனால் இந்தப் பணவீக்கம், விலைவாசியிடம் இருந்து தப்பிக்க முடியாமல் இருக்கிறது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்றால் கொரோனா காலத்தில் வளரும் நாடுகளும், சிறிய நாடுகளும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டது, வல்லரசு நாடுகளும், பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளும் அதிகம் பதிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வில் மாட்டிக்கொண்டு மோசமான பொருளாதார மந்தநிலையைச் சந்தித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் 2008 சர்வதேச நிதிநெருக்கடியில் கூட நடக்காத ஒரு விஷயம் தற்போது நடந்துள்ளது.
ஆர்பிஐ ஒற்றை அறிவிப்பால் 36 பில்லியன் டாலர் சேமிப்பு.. ரஷ்யா, ஈரான் உடன் டீல்..!
நாணய சந்தை
பொதுவாக நாணய சந்தையில் அமெரிக்க டாலர் அதிகளவில் வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்டாலும், ஒட்டுமொத்த ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் யூரோ நாணயத்தின் மதிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது.
யூரோ மற்றும் டாலர்
2008 சர்வதேச நிதி நெருக்கடி, ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் தனியார் பிரிந்த போது கூட நடக்காத ஒன்று, தற்போது நடந்துள்ளது. ஆம், யூரோ மற்றும் டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் முதல் முறையாகச் சம நிலையை எட்டியுள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுப் பாதிப்பில் முழுமையாக மீண்டு வருவதற்கு முன்பாகவே, ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போர்-ரின் விளைவாக ஐரோப்பிய பொருளாதாரம் மோசமான மந்தநிலையை நோக்கி செல்கிறது என்பதை யூரோ மற்றும் டாலர் மதிப்பு சம நிலை ஒரு முக்கியமான சிக்னல் ஆகப் பார்க்கப்படுகிறது.
சம நிலை
இன்று, 1 யூரோ-வின் மதிப்பு 1 அமெரிக்க டாலர் மாற்றம், இனி ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அதே நேரத்தில் ஐரோப்பிய ஏற்றுமதிகள் சர்வதேச சந்தைகளில் உடனடியாக மலிவாகும். பிப்ரவரி தொடக்கத்தில் 1.13 டாலருக்கு மேல் இருந்த யூரோ மதிப்புத் தற்போது இழப்பைச் சந்தித்துள்ளது.
கஜகஸ்தான் கச்சா எண்ணெய்
ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் சப்ளையை உறுதி செய்யும் கஜகஸ்தான் கச்சா எண்ணெய் விநியோக பாதையைத் தடை செய்யும் முயற்சியில் விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு இறங்கியுள்ளது.
ஐரோப்பா-வுக்குச் செக்
இது மட்டும் அல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நாளுக்கு 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உருவாகும். இது ஐரோப்பிய பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிப்பது மட்டும் அல்லாமல் யூரோ மதிப்பை மேலும் மோசமானதாக்கும். கடைசியாக நவம்பர் 2002-ல் யூரோ மதிப்பு டாலருக்கு எதிராக 0.99 வரையில் சரிந்தது.
அமெரிக்கா
அமெரிக்கா காலம் காலமாகத் தனது நாணய கொள்கையை அதிகப்படியான தளர்வுகளுடன் வைத்திருந்து டாலர் வாயிலான வர்த்தகத்தை ஊக்குவித்து வந்த வேளையில் தற்போது பணவீக்கம் அதிகரித்த காரணத்தால் வேக வேகமாகப் பென்ச்மார்க் வட்டியை அதிகரித்து டாலர் ஆதிக்கம் பெற்றுள்ளது.
வேறு வழியே இல்லை
அமெரிக்க அரசுக்குப் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வின் பாதிப்பு அதிகமாக இருந்த வேளையில், இதைச் சமாளிக்க வேறு வழியே இல்லாமல் பென்ச்மார்க் வட்டியை அதிகரித்து வருகிறது. இதைச் செயற்கையாக அமெரிக்கா செய்கிறது என்பதைத் தாண்டி வேறு வழியே இல்லாமல் செய்கிறது என்பது தான் உண்மை.
One Euro equals one Dollar For the first time in 20 years; EUR-USD got parity
One Euro equals one Dollar For the first time in 20 years; EUR-USD for parity எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல.. 20 வருடத்தில் நடக்காத ஒன்று..!