இந்தியாவின் பிசியான விமான பாதை எது தெரியுமா? சென்னைக்கு எந்த இடம்?

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் விமான நிறுவனங்களின் சேவை தற்போது அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பிஸியாக இருக்கும் விமான பாதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 10 விமான நிலையங்களில் அதிக அளவு விமான போக்குவரத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் டெல்லி – மும்பை விமான பாதையில் தான் அதிக அளவு விமான போக்குவரத்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

9 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையலாம்.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

விமான சேவைகள்

விமான சேவைகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் முழுமையாக விமான சேவைகள் இன்னும் நிகழவில்லை என்றும் தினமும் 4 லட்சத்திற்கு அதிகமான பயணிகள் பயணம் செய்யும் நிலை ஒரு சில முறை மட்டுமே நடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணிகள்

விமான பயணிகள்

ஒட்டுமொத்த விமான பயணிகளின் சராசரி இன்னும் அதிகரிக்கவில்லை என்றும் இன்னும் சில மாதங்கள் வரை அது நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே தற்போது விமான சேவைகள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக கோவா போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவா - ஸ்ரீநகர்
 

கோவா – ஸ்ரீநகர்

கொரோனா பாதிப்புக்கு பின்னர் அதிக அளவு பயணிகள் செல்வது கோவாவுக்கு தான் என்றும் அதனை அடுத்து ஸ்ரீநகர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

ஜூன் இரண்டாம் பாதியில் உள்நாட்டு விமான போக்குவரத்து சற்று குறைந்துள்ளதாகவும் இதற்கு பருவநிலை மாறுபாடு ஒரு காரணம் என்று கூறப்பட்டாலும் விமானத்திற்கு பயன்படும் எரிபொருள் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதை அடுத்து விமான கட்டணமும் உயர்ந்து உள்ளதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விமான எரிபொருள்

விமான எரிபொருள்

விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் டெல்லியில் கிலோலிட்டருக்கு ரூ. 1.41 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் பயணிகள் கட்டணமும் உயர்ந்துள்ளதால் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிசியான விமான பாதை

பிசியான விமான பாதை

இந்தியாவில் ஜூலை மாதத்தில் 1,000 விமானங்களுக்கு மேல் சேவை செய்து வந்தாலும் 3 வழித்தடங்களில் மட்டுமே அதிக அளவில் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதலாவதாக டெல்லி – மும்பை வழித்தடத்தில் அதிக பயணிகளும் அதனை அடுத்து டெல்லி – பெங்களூரு அதன் பின்னர் டெல்லி – கொல்கத்தா வழித்தடங்களில் அதிக பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சராசரி சேவை

சராசரி சேவை

இந்தியாவில் தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 3615 விமானங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சராசரியாக அங்கீகரிக்கப்பட்ட விமானங்களில் 70 முதல் 75 சதவீதம் மட்டுமே பயணிகளுக்கு சேவை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பயணிகள்

சர்வதேச பயணிகள்

கடந்த ஆண்டு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 67.3 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான பயணிகள் உள்நாட்டு பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியின் போக்குவரத்தில் சுமார் 31 சதவீதத்தை சர்வதேச பயணிகளை கொண்டுள்ளது.

மும்பை விமான நிலையம்

மும்பை விமான நிலையம்

டெல்லியை அடுத்து 45.8 மில்லியன் பயணிகளைக் கையாளும் மும்பை விமான நிலையம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பரபரப்பான விமான நிலையங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது.

பெங்களூரு விமான நிலையம்

பெங்களூரு விமான நிலையம்

டெல்லி, மும்பையை அடுத்து 32.3 மில்லியன் பயணிகளுடன் பெங்களூர் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் விமான நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னையை பொருத்தவரை ஒரு ஆண்டுக்கு 22.2 மில்லியன் விமான பயணிகள் பயணம் செய்துள்ளதால் இந்திய அளவில் நான்காவது இடத்தில் உள்ளது.

 

மொத்தத்தில் இந்த ஆண்டை பொருத்தவரை டெல்லி-மும்பை, டெல்லி-ஸ்ரீநகர், டெல்லி-பெங்களூரு ஆகிய விமான பாதைகளில் தான் அதிகளவு பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Which is the busiest airline route in India? What about Chennai airport?

Which is the busiest airline route in India? The Indian Air Route information | இந்தியாவின் பிசியான ஏர் பாதை எது தெரியுமா? சென்னைக்கு எந்த இடம்?

Story first published: Wednesday, July 13, 2022, 10:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.