வாழைப்பழங்கள் என்பது இந்தியர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாகும்.
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் இந்தியாவில் மட்டுமின்றி தற்போது வெளிநாட்டிலும் அதிகமாக மக்கள் விரும்பி சாப்பிடும் பழமாக உள்ளது.
குறிப்பாக இந்திய வாழைப்பழங்களை போட்டிபோட்டுக்கொண்டு வெளிநாடுகள் வாங்கி வருவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் வாழைப்பழங்களின் சதவீதம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
5ஜி ஏலம் குறித்த முக்கிய அம்சங்கள்: ஏலம் எடுத்தவர் எவ்வளவு முன்தொகை கட்ட வேண்டும்?
வாழைப்பழ ஏற்றுமதி
கடந்த 9 ஆண்டுகளில் ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவின் வாழைப்பழம் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
703 சதவிகிதம் அதிகம்
வாழைப்பழ ஏற்றுமதி கடந்த 2013 ஏப்ரல்-மே மாதங்களில் ரூ. 26 கோடியாக இருந்த நிலையில் 2022 ஏப்ரல்-மே மாதத்தில் ரூ.213 கோடியாக உயர்ந்தது. இது 703 சதவிகிதம் அதிகம் என்பதும், வியக்க வைக்கும் வகையில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தரம்
இந்தியாவில் விளையும் வாழைப்பழங்களின் தரம் காரணமாகவே உலக அளவில் இந்திய வாழைப்பழ ஏற்றுமதி அதிகரிக்க காரணம் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உலக உற்பத்தியில் 25 சதவிகிதம்
உலகின் மொத்த வாழைப்பழ உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வாழை உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன.
ஏற்றுமதியாளர்களுக்கு உதவி
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆகிய அமைப்புகள் வாழைப்பழ உற்பத்தி மற்றும் பதப்படுத்தப்படுவதை ஊக்கிவித்து ஏற்றுமதிக்கு உதவி செய்கிறது. அதேபோல் உள்கட்டமைப்பு மேம்பாடு, தர மேம்பாடு மற்றும் சந்தை மேம்பாடு போன்ற பல்வேறு வகைகளில் வாழைப்பழ ஏற்றுமதியாளர்களுக்கு உதவி வழங்குகிறது.
Indian banana export increases by 703 percentage says Minister Piyush Goyal
Indian banana export increases by 703 percentage says Minister Piyush Goyal | இந்திய வாழைப்பழங்களை போட்டி போட்டு வாங்கும் வெளிநாடுகள்: ஏற்றுமதி 703% அதிகரிப்பு